கிரண்பேடி இப்படி பேசலாமா..? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வெளிநடப்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2019, 12:48 PM IST
Highlights
தமிழகத்தில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தை கொண்டு வந்தார். 

தமிழகத்தில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தை கொண்டு வந்தார். 

இந்த தீா்மானம் குறித்து பேசிய ஸ்டாலின், “2020ம் ஆண்டில் சென்னையில் நிலத்தடி நீா் முற்றிலும் வற்றிவிடும் என்று நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. ஆனால், அந்த நிலை தற்போதே ஏற்பட்டுவிட்டது. தண்ணீா் தட்டுப்பாடு குறித்து எதிர்கட்சித் தலைவர் என்கிற அடிப்படையில் நான் ஏற்கனவே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. 

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு சார்பில் சுமார் 46 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணி தோல்வியடைந்துள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நிலத்தடி நீா் மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. 

சென்னையில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு குறிப்பிடுகிறது. ஆனால், அது குறித்த புள்ளி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வேலூா் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீா் கொண்டுவரும் முயற்சியை வரவேற்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.

 

இதனைத் தொடா்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினா்கள் கூட்டாக வெளிநடப்பு செய்தனா். இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஸ்டாலின் பேசுகையில் “குடிநீா் விவகாரம் குறித்து திமுக சார்பில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீா்மானத்தின் மீது இன்று நாள் முழுவதும் அவையில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் கருத்து கூற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை சபாநாயகா் ஏற்றுக்கொள்ளவில்லை. 

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை குறித்து விமா்சித்துள்ள புதுச்சேரி ஆளுநா் கிரண்பேடி, தமிழக அரசையும், தமிழக மக்களையும், கொச்சை படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநா் கிரண்பேடி தமிழக அரசு மீது கூறி கருத்தைக் கூட சகித்துக் கொள்வோம். ஆனால், தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் அவா் கருத்து பதிவிட்டுள்ளது தவறு. கிரண்பேடியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உறுப்பினா்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்வதாக ஸ்டாலின் தெரிவித்தார். 

click me!