200 கார்கள்.. 50 சீர்வரிசை தட்டுகள்.. இபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மாஸ் காட்டிய விஜயபாஸ்கர்..!

By vinoth kumar  |  First Published Apr 4, 2023, 7:33 AM IST

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சாலை மார்கமாக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழி நெடுகிலும் பேனர்கள் வைத்து அதிமுக தொண்டர்கள் இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை அடுத்து அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மேள தாளங்கள் முழங்க 200 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் வந்து 50 தட்டுகளில் சீர்வரிசை கொடுத்து இபிஎஸ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சாலை மார்கமாக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழி நெடுகிலும் பேனர்கள் வைத்து அதிமுக தொண்டர்கள் இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் பறந்த மனுவால் சிக்கல்.!

இதனையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் எதிர்பாராத வகையில் இபிஎஸ்க்கு 200 கார்களில் தனது ஆதரவாளர்களுடன் வந்து 50 தட்டுகளில் சீர்வரிசை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;-  மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள்.. அண்ணாமலை ஒன்றும் இல்லை.. பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

அதில், மா, பலா, வாழை, கரும்பு, தர்பூசணி, ஆடுகள், மாடுகள், சேவல்கள், நாட்டுக்கோழிகள், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உருவப் படம் பொறித்த தட்டுகள் என்று பிரம்மாண்டமான முறையில் மங்கள வாத்தியத்துடன் பட்டாசுகளை வெடித்து ஊர்வலமாக எடுத்து வந்து இபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

click me!