
வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்த விஜயபாஸ்கர், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.
வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கரிடம், அதிகாரிகள் காலை 11 மணியில் இருந்து தொடர்ந்து 5 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தி உள்ளனர்.
விசாரணையில் நேரடியாகவே, உங்களுக்கு 89 கோடிபணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது என்று கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு, நேரடியாக பதில் சொல்ல முடியாத அவர், இதெல்லாம் பழி வாங்கும் நடவடிக்கை என்று, காதை சுற்றி மூக்கை தொடும் வகையிலேயே பதில் சொல்லி இருக்கிறார்.
மேலும், பன்னீர்செல்வம் சேர்த்த பணம் மற்றும் சொத்துக்கள் பற்றியே, திரும்ப திரும்ப பேசி இருக்கிறார். பின்னர் வருமான வரி அதிகாரிகள் கிடுக்கிபிப்பிடி போட்டு அவரை திணற அடித்துள்ளனர்.
உங்களை ஒரே நாளில் வளைத்து பிடிக்கவில்லை. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தேர்தல்களிலேயே உங்களை நெருங்கி விட்டோம் என்று வருமான வரித்துறையினர் கூறி உள்ளனர்.
கரூர் அன்புநாதனுக்கும் உங்களுக்குமிடையே நடந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அமலாக்கத் துறையிடமிருக்கிறது.
அத்துடன், கடந்த 120 நாட்களாக உங்களை கண்காணித்து வந்துள்ளோம் என்று அதிரடியாக பேசிய அதிகாரிகள், சில ஆதாரங்களை எடுத்து அவரிடம் நீட்டி உள்ளனர்.
அதைக்கண்டு மிரண்டு போன விஜயபாஸ்கர், எதுவும் சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் வர, கர்ச்சீப்பை எடுத்து துடைத்துள்ளார்.
பின்னர், அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அதிகாரிகள் பேச, ஒரு கட்டத்தில், வேறு வழியில்லாமல், உண்மைகள் பலவற்றை ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர், இந்த பிரச்சினைகளில் இருந்து மீண்டு வருவதற்கு, என்ன செய்வது? என்று வருமான வரி துறையினரிடம், அவர் ஆலோசனை கேட்டதாகவும் கூட சொல்லப்படுகிறது.