
அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் கல்குவாரியில் மத்திய பொதுப் பணித்துறையினர் இன்று அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்தொகுதிய்ல அளவில்லாமல் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அத்தொகுதியில் டி.டி.வி.தினகரன் சார்பில் நடைபெற்ற பணப்பட்டுவாடாவுக்கு மூலகாரணமாக இருந்தவர் என்ற அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, மற்றும் அவர் உறவினர்கள் நண்பர்கள் உட்பட 30 இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது.
இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது இதையடுத்து நேற்று அமைச்சர் விஜய பாஸ்கர் சென்னை வருமான வரித்துறை அலுவலத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மன்று நாட்களுக்குப்பின் அவர் மீண்டம் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் மத்திய பொதுப் பணித்துறை அதிகாரிகள் தற்போது ஆய்வு நடந்தி வருகின்றனர்.
இந்த ஆய்வில் 15 அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குவாரியில் அளவுக்கு அதிகமாக கல் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் முறைகேடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.