
தினகரனையும், அமைச்சர் விஜயபாஸ்கரையும் ஒரே நேரத்தில் கைது செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய வருமான வரித்துறை, இந்த வழக்கை சி.பி.ஐ க்கும், அமலாக்க துறைக்கும் மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
அப்படி மாற்றப்பட்டால், விஜயபாஸ்கரை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் விஜயபாஸ்கர் மீது கோபம் எதுவும் இல்லை என்றும், தினகரனை ஒடுக்குவதற்காகவே, மத்திய அரசு கடுமை காட்டுவதாக கூறப்படுகிறது.
மறுபக்கம், இரட்டை இலை புரோக்கர் விவகாரத்தில், தினகரன் மீது டெல்லி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில், அவரை கைது செய்வது குறித்து, சட்ட நிபுணர்களிடம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
புரோக்கர் சுகேஷ் சந்திராவிடம், தினகரன் செல்போனில் பேசிய பேச்க்களை உளவுத்துறையினர், பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அமைச்சர் விஜயபாஸ்கரையும், தினகரனையும் ஒரே நேரத்தில் கைது செய்து, தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.