செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையில், மொத்த திமுக குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் அமலாக்கத்துறையிடம் மாட்டுவர்கள் என தேமுதிக சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக ஆர்ப்பாட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் ரூபாய் 1000 வழங்க வேண்டும் எனவும், காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் திமுகவை கண்டித்து முழக்கமிட்டனர். கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன் , திமுகவில் சிலை மட்டும் திறந்து வைக்கிறார்கள் அடிப்படை தேவைகள் எதுவும் செய்யவில்லை, தேர்தல் வாக்குறுதி படி புகார் பெட்டி வைக்கவில்லை, அப்படி வைத்தால் மொத்த புகாரும் திமுக மீது தான் இருக்கும் அதனால் தான் வைக்கவில்லை என்றார்.
திமுக Photo shoot ஆட்சி
நேரம் இல்லை என கூறும் முதல்வர் 4 மணி நேரம் ஐ.பி.எல்.மேட்ச் பார்க்கிறார், உயநிதி நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும் அவரது இஷ்டம் விளையாட்டு துறையில் என்ன என்ன மேம்பாட்டை செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். திமுக Photo shoot ஆட்சி நடத்துவதாக விமர்சனம் செய்தவர், சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த ஒரே கட்சி தேமுதி ,எங்கள் கட்சி எப்போதும் சூப்பர் கட்சி தான். ஒவ்வொரு தேர்தல் கூட்டணியின் போது தேமுதிக சுற்றி தான் ஒரு சின்ன அரசியல் நடக்கிறது என்றார். மேலும் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என விஜயகாந்த் குறித்து பேசிய அவர், அவர் ஓய்வு எடுக்கட்டும். அவரது பணியை நாம் செய்வோம் அப்பாவின் கனவை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன் என்றார்.
செந்தில் பாலாஜி- திமுக குடும்பமே சிக்கும்
போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், அமலாக்கத்துறை காரணம் இல்லாமல் செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய மாட்டார்கள் என்றும் மொத்த திமுக குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் மாட்டுவார்கள் என தெரிவித்தார். தேமுதிக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தி கருத்து கேட்டு வருவதாகவும் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்போம் என தெரிவித்தார்.
பாஜகவிற்கு ஆதரவு இல்லை
மணிப்பூர் பிரச்சனையில் பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டதிற்கு முற்றிலுமாக பாஜக மீது பழி போடமுடியாது என தெரிவித்தார். மேலும் நான் பா.ஜ.க-வை ஆதரிக்கவில்லை, மணிப்பூர் பிரச்சனைக்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் எனக் கூறினார். அண்ணாமலை நடைபயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதனால் தேமுதிக ராமநாதபுரம் மாவட்ட செயலார் அதில் கலந்துகொண்டார். இதனால் பா.ஜகவிற்கு ஆதரவு என்பது இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
பாஜகவின் மிரட்டல்களுக்கும் பூச்சாண்டிக்கும் அஞ்ச மாட்டோம்- இறங்கி அடிக்கும் ஸ்டாலின்