அவர் குடிகாரரா..? பீரிட்டுக் கிளம்பும் தேவர் அமைப்புகள்... வாயைக் கொடுத்து தர்ம அடிக்கு தயாரான விஜய்சேதுபதி..?

By Thiraviaraj RMFirst Published Nov 9, 2021, 2:01 PM IST
Highlights

மாறாக மகாகாந்தியை குடிகாரராக சித்தரிக்க முயல்வதால் தேவர் சார்ந்த சமுதாயத்தினர் மேலும் விஜய் சேதுபதி மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார். அப்போது விமான நிலையத்திற்கு சென்ற போது, அங்கு நடிகர் விஜய்சேதுபதியை ஒரு நபர் வந்து உதைத்ததாகக் கூறப்பட்டது. இது அங்குள்ளவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டதால் உடனே இணையதளத்தில் வைரல் ஆனது.
 
இதனால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குரல் கொடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

’’தாக்கிய நபர் குடிபோதையில் இருந்தார். அவர் மாஸ்க் அணிந்திருந்ததால் அது வெளியே தெரியவில்லை. செல்போனில் ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் ஊதி பெரிதாக்கப்பட்டது. தாக்கிய நபரை காவல் நிலையம் அழைத்துப் போய் அப்போதே பிரச்சனை தீர்க்கப்பட்டது.  
நான் பாதுகாவலர்களுடன் பயணம் செய்வதில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரைத்தான் அழைத்துச் சென்றேன். பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை’’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், மகா காந்தி, நடிகர் விஜய் சேதுபதி நாட்டையும், தேவரையும் அவமானமாக பேசினார். என்னையும் தாக்கினார்கள். அதனால்தான் விஜய் சேதுபதியை அடித்தேன். நான் மலையாளியோ, கன்னடனோ இல்லை. சுத்த தமிழன். என் பெயர் மகா காந்தி என விஜய் சேதுபதியை அடித்தவர் தெரிவித்தார். விஜய் சேதுபது விமான நிலையத்தில் அடிவாங்கிய சம்பவம் தமிழக ஊடகங்களை தாண்டி தேசிய ஊடகங்களிலும் எதிரொலித்தது. விஜய் சேதுபதி தாக்கப்பட்ட செய்தி குறித்து எந்த ஊடகமும் விவாதங்கள் நடத்தவில்லை.

அடிவாங்கியதாக வெளியான வீடியோ வெளிவந்த பின்பும் விஜய் சேதுபதி தரப்பு காவல்நிலையத்தில் புகாரோ அல்லது  சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத போதே பலரும் சந்தேகத்தை எழுப்பினர்.விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர் கேரளாவை சேர்ந்தவரோ அல்லது கர்நாடகாவை சேர்ந்தவரோ கிடையாது தமிழகத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்த மாக காந்தி என்பவர் நான் தான் விஜய் சேதுபதியை அடித்தேன்,  விமான நிலையத்தில் அவரை பார்த்த நான் தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் என கூறினேன் இதெல்லாம் தேசமா என அவர் கேட்டார், நான் ஒரு தேசியவாதி தேசத்தை மதிக்கும் தேவர் வழியில் வந்தவன்.

தேவர் குரு பூஜைக்கு வருவீங்களா என கேட்டேன் அதற்கு யார் குரு? எனக் கேட்டார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய என்னை அடிக்கவும் செய்தனர். இனிமேலும் பொறுத்து கொள்ள கூடாது என்றுதான் அடித்தேன். என்னை அடித்தார் திருப்பி அடித்தேன். தேசத்தையும், தேவரையும் தவறாக பேசியதால் அடித்தேன் என மாகா காந்தி தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் தேசத்தை நேசிப்பவர்கள் மத்தியிலும், தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என சொன்ன தேவர் பெருமகனாரை நேசிப்பவர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது எனத் தெரிவித்தார். மேலும் தேவரை அவர் ஒரு ஜூவியஸ் கார்பெண்டர் என அவமதித்தார். 

க/பெ. ரணசிங்கம் படத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது அந்த வீட்டில் பசும்பொன் தேவரின் புகைப்படமும் இருந்தது. இந்த போட்டோ காட்சியில் வரக்கூடாது என கழட்ட சொன்னவர் தான் இந்த விஜய் சேதுபதி. அதே சேதுபதி இப்போது மீண்டும் தேவர் குறித்து பேசி அடி வாங்கி இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் தேவர் சமூகம் மீது திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியுடன் விஜய் சேதுபதி செயல்படுகிறார், அவர் படங்கள் இனி தென் தமிழகத்தில் எங்கும் ஓடாது விஜய் சேதுபதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் சென்னை மற்றும் அவரது சொந்த ஊரான ராஜபாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டினை முற்றுகை இடுவோம் என தேவர் அமைப்புகள் சில எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த சூழலில் விஜய் சேதுபதி மீண்டும் தக்காப்படலாம் அல்லது விவகாரம் வேறு பாதையில் செல்லலாம் என்பதால் உடனடியாக விஜய் சேதுபதி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்க காவல்துறை விரைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதெல்லாம் தேசமா என விஜய் சேதுபதி கேட்டதும் தேவரை அவமான படுத்தும் வகையில் விஜய் சேதுபதி பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருதை திரும்ப பெறுவதுடன் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பதை தடுக்க வேண்டும் தமிழ் மக்கள் விஜய் சேதுபதியை புறக்கணிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கே.கே. வலியுறுத்தியுள்ளார். 

விஜய் சேதுபதி மீது தவறு இருக்கும் பட்சத்தில்தான் அடிவாங்கிய பின்பும் சட்ட ரீதியாக எந்த புகாரும் காவல் நிலையத்தில் கொடுக்கவில்லை. தாமதமாக இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள விஜய் சேதுபதி, மகா காந்தி குடித்து விட்டு வந்து கேள்வி கேட்டார் என்று குற்றம்சாட்டி இருப்பதால் இந்த பிரச்னை இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேவர் குறித்தும் இந்த தேசம் குறித்தும் தான் எதுவும் பேசவில்லை என்று அவர் மறுக்கவில்லை. மாறாக மகாகாந்தியை குடிகாரராக சித்தரிக்க முயல்வதால் தேவர் சார்ந்த சமுதாயத்தினர் மேலும் விஜய் சேதுபதி மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தி விஜய்சேதுபதிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

click me!