திருவள்ளுவர் கிறிஸ்தவரா.?? சிவன் கோவிலை இடித்து சாந்தோம் சர்ச்.. திருமாவளவனை புரட்டியெடுத்த எச். ராஜா

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2021, 12:41 PM IST
Highlights

இப்படி இருக்க வள்ளுவர் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பண்ண பட்டவராக எப்படி இருப்பார், ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.? இன்றைக்கு வள்ளுவனை கிறிஸ்தவர் என்பதைபோன்று ஆவணப்படுத்தி வைக்கிறார்கள், நாளைக்கு திரவிடியன் ஸ்டாக் இதையே சொல்லிக் கொடுத்து இதுதான் உண்மை என்று கூற திட்டம் வைத்திருக்கிறது.  

திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பதுபோன்ற பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் திருமாவளவன் போன்றவர்கள் ஈடுபட்டிருப்பதாக விமர்சித்துள்ள எச். ராஜா வள்ளுவர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை எனவும் அதற்கு பல ஆதாரங்கள் உள்ளது என கூறி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். பாஜகவுக்கு விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்பட்டு அது விவாதப் பொருளாக மாறி வருவது வழக்கமாக ஒன்றாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்துக் கோயில்களில் உள்ள சிலைகள் குறித்த திருமாவளவன் பேசிய கருத்து பெரும் விவாதப் பொருளாக மாறியது, அதேபோல் மனு சாஸ்திர நூலில் பெண்கள் விபச்சாரிகளாக பாவிப்பதாக உள்ளது என திருமாவளவன் சுட்டிக்  காட்டிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனு நூலில் அப்படி இருக்கிறது என சுட்டிக்காட்டிய அவரை, அவரே பெண்களை தவறாக கூறி விட்டார் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பாஜகவினர் போராட்டம் நடத்தியதும் நடந்தது. 

தற்போது  திருமாவளவன் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் புத்தக ஆசிரியரின் கருத்தான திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர், அவர் கிறிஸ்தவர் என கூறியதை மேற்கோள் காட்டி பேசினார். அவரது அந்தப் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது, அதாவது  " திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்"  என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 5 தேதி சென்னையில் நடைபெற்றது, அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை வள்ளுவர் எழுதியுள்ளதாக, நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது என்றார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், திருவள்ளுவரை ஒவ்வொரு சமூகத்தவரும் உரிமை கோருகின்றனர், ஆனால் மதமும் கடவுளும் வேண்டாம் என்று வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. இப்போது கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்துக்கும் எத்ராக மத வெறுப்பு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

சமூக நீதியை வென்றெடுப்பதற்கு திருக்குறளும் ஒரு ஆயுதமாக உள்ளது, இனி கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிப்பதற்கு இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும் என அவர் கூறினார். மொத்தத்தில் அவர் கருத்தை அதை ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது. இந்நிலையில் வழக்கம்போல பாஜக  தலைவர்களில் ஒருவரான எச். ராஜா அந்த புத்தகத்தையும், திருமாவளவன் பேச்சையும் கடுமையாக விமர்சித்து  யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், தெய்வநாயகம் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ள திருமாவளவனிடம் நான் ஒன்று கேட்கிறேன், திருமாவளவன் எப்படி  உங்களுக்கு கிறிஸ்தவர் ஆனார், இந்துக்கள் சனாதனவாதிகள், திருமாவளவன் அவர்கள்  புரிவதற்காக சொல்கிறேன், ஆண்டவனை பகவான் என்பது சனாதன வாதிகளின் பழக்கம், ஆனால் அதே ஆண்டவனையும் தேவன் என்று சொல்வதுதான்  விவிலியத்தில் பழக்கம், திருக்குறள் முதல் குறலிலேயே திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவராக இருந்திருந்தால், அகர முதல எழுத்தெல்லாம் ஆதி தேவன் முதற்றே உலகு என்றுதான் எழுதி இருக்க வேண்டும், ஆனால் அவர் எப்படி அதை எழுதி இருக்கிறார், ஆதி பகவன் முதற்றே உலகு என்று தான் எழுதி இருக்கிறார்.

இது மட்டுமல்ல இஸ்லாமியர்கள் உருவம் இல்லாத கடவுளை வழிபடுகின்றனர், கிருஸ்தவர்கள் இயேசுநாதரை வழிபடுகின்றனர், ஆனால் இறைவனின் திருவடியை வழங்குவது என்பது இன்று சனாதனவாதி களின் பழக்கம், அதற்கேற்ப வள்ளவர், பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தார் என்றுதான் கூறியுள்ளார், எனவே வள்ளுவர் கிறிஸ்தவர் என்று கூறுபவர்கள் அனைவரும்  கிரிப்டோ  கிருத்துவர்கள், இவர்களெல்லாம் அரைகுறையாக படித்துவிட்டு அனைத்தும் தெரிந்ததைப் போல பேசுபவர்கள், இவர்கள் எல்லாம் தற்குறிகள், தமிழ்நாட்டில் திரவிடியன் ஸ்டாக் என்ற ஒரு மூடர் கூட்டம் உள்ளது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொன்னார் என்று கூறுவார்கள், திருக்குறளில் சொல்லியிருக்கிற ஒவ்வொன்றும் பகவத்கீதையில் தெளிவாக சொல்ப்பட்டுள்ளது. திருக்குறளில் அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் என்கிறார் இப்படி எந்த விவிலியத்திலாவது சொல்லப்பட்டிருக்கிறதா,  

இப்படி இருக்க வள்ளுவர் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பண்ண பட்டவராக எப்படி இருப்பார், ஏன் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.? இன்றைக்கு வள்ளுவனை கிறிஸ்தவர் என்பதைபோன்று ஆவணப்படுத்தி வைக்கிறார்கள், நாளைக்கு திரவிடியன் ஸ்டாக் இதையே சொல்லிக் கொடுத்து இதுதான் உண்மை என்று கூற திட்டம் வைத்திருக்கிறது.  அதேபோல் சென் தாமஸ் பற்றி சொல்லுகிறார்கள் எட்டாவது நூற்றாண்டில் அவர் வந்ததாக கூறப்படுகிறது ஆனால் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது கடை தமிழ் சங்கம் காலத்தில் மதுரையில் உக்கிர பெருவழுதி பாண்டியன் மன்னராக இருந்தபோது சங்க பலகையில் வைத்து பொற்றாமரையில் சங்கப் பலகையில் அரங்கேற்றப்பட்டது. அப்படிப் பார்த்தாலும் கூட காலம் ஒத்து வரவில்லை,  இந்த புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் சாந்தோம் தேவாலயம் இந்துக் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்பதை திருமாவளவன்  ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு கொஞ்சம்கொஞ்சமாக கிறிஸ்தவர்களின் கைக்கு சென்று கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த ஆறு மாதமாக இது வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

சிஎஸ்ஐ கூட்டத்தில் பேசுகிற  திரவிடியன் ஸ்டாக் ஸ்டாலின், சிவன் கோவிலில் இடிப்பேன், பெருமாள் கோயிலை இடிப்பேன், சரக்கு மிடுக்கு எனப் பேசிய கலவர புத்தி உடைய தீயசக்தி  திருமாவளவன் இவர்கள் எல்லோரும் இந்து மதத்தை சீண்டி பார்க்கிறார்கள், திருவள்ளுவருக்கு ஞானஸ்தானம் செய்து வைத்தது செயிட்ன் தாமஸ் என்கிறார்கள் தாமஸ் பற்றி பல்வேறு புரட்டுகள் உள்ளது, மொத்தத்தில் அவர் இந்தியாவுக்கே வரவில்லை என்ற கருத்தும் உள்ளது. ஆனால் ஒருவகையில் நான் திருமாவளவன் அவர்களுக்கு நன்றியை சொல்ல விரும்புகிறேன், 1992 இல் நான் படித்த ஒரு புத்தகம் அந்தப் புத்தகத்தின் டைட்டில் myth of Saint Thomas Mylapore Shiva temple,இந்த புத்தகம் 1901 இல் பிரசுரிக்கப்பட்டது, இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது, போர்த்துகீசியர்கள் சென்னைக்கு வந்து மயிலாப்பூரை கைப்பற்றியபோது கடற்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோயிலை 1560 ல் இடித்து அங்குதான் சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதை  திருமாவளவன் திருமாவளவன் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு எச்.ராஜா பேசியுள்ளார். 
 

click me!