நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக சைக்கிளில் வந்திருப்பார் விஜய்.. குஷ்பு அளித்த விளக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Apr 6, 2021, 12:14 PM IST
Highlights

நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில், இந்த முறை வாக்களிக்க சைக்கிளில் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம் என கூறினார் .

சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது எதிர்பாராத ஒன்று எனவும், ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் நேர்த்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருக்கலாம் எனவும் குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

தமிழகம்,புதுவை, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசியல்  கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. கோடை வெயில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் நடைபெற்ற பிரச்சாரம் கடந்த 4ஆம் தேதி மாலையுடன்  ஓய்ந்தது.  மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 

அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் விஜய் , அஜித் உள்ளிட்டோரும் ஜனநாயக கடமை ஆற்றி உள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்நிலையில்  அதிமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் ஆயிரம்விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பு இன்று காலையே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு,  ஆயிரம் விளக்கு தொகுதியில் நான்கு இடங்களில் வாக்கு இயந்திரங்கள் பழுதாகி உள்ளது. ஆனால் அது விரைவில் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 

திமுக என்பது எப்போதும் விதிமுறைகளை மீறுகின்ற கட்சி எனக் கூறினார். மேலும்  சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதே  என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டது எதிர்பாராத ஒன்று என மழுப்பலாக  பதிலளித்தார்.  அதேபோல் நடிகர் விஜய் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில், இந்த முறை வாக்களிக்க சைக்கிளில் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பதற்காக விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம் என கூறினார் . அதேபோல தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது ஏப்ரல் 2ஆம் தேதி தெரிந்துவிடும் எனவும் அவர் கூறினார் .
 

click me!