கடைசி நிமிடம் வரை திக்..திக்..! இடதுசாரிகள், விசிகவை கதற விட்ட திமுக மேலிடம்..!

By Selva KathirFirst Published Mar 12, 2021, 10:46 AM IST
Highlights

கூட்டணியில் இருந்தால் புகழ்ந்து பேசுவது, கூட்டணியில் இல்லை என்றால் தரம் தாழ்ந்து விமர்சிப்பது என இதுநாள் வரை கல்லா கட்டி வந்த இடதுசாரிகள் மற்றும் விசிகவை தொகுதி உடன்பாடு விவகாரத்தில் பாடாய்படுத்தி எடுத்துள்ளது திமுக.

கூட்டணியில் இருந்தால் புகழ்ந்து பேசுவது, கூட்டணியில் இல்லை என்றால் தரம் தாழ்ந்து விமர்சிப்பது என இதுநாள் வரை கல்லா கட்டி வந்த இடதுசாரிகள் மற்றும் விசிகவை தொகுதி உடன்பாடு விவகாரத்தில் பாடாய்படுத்தி எடுத்துள்ளது திமுக.

கூட்டணி கட்சிகளை தொகுதிப்பங்கீட்டிற்கு அழைப்பதற்கு முன்னரே எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள், எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை தீர்மானித்துவிட்டது திமுக மேலிடம். அதனை ஒட்டியே டி.ஆர்.பாலு தலைமையிலான குழு கூட்டணி கட்சிகளிடம் பேசி வந்தது. தொகுதி எண்ணிக்கையை பொறுத்தவரை எந்த கட்சியுடனும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்பதில் டி.ஆர்.பாலு குழுவுக்கு ஸ்டாலின் மருமகன் சபரீசன் தரப்பில் இருந்து மிக கடுமையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் தொகுதிப்பங்கிட பேச்சுவார்த்தை தொடர்பாக நிமிடத்திற்கு நிமிடம் சபரீசனுக்கு வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பிக் கொண்டே இருக்கப்பட்டது.

அவர் வாட்ஸ்ஆப்பில் அளித்த பதிலையே கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தது. இடதுசாரிகளை பொறுத்தவரை 4 தொகுதிகளில் ஆரம்பித்து 6 தொகுதிகளில் முடிக்க வேண்டும் என்பது தான் திமுக மேலிடத்தின் தீர்க்கமான முடிவு. அதனை சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியது டி.ஆர்.பாலு தலைமையிலான குழு. ஏழு தொகுதிகள் என்று இழுத்தடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை 6 தொகுதி இல்லை என்றால் கூட்டணியே வேண்டாம் என்கிற ரீதியில் பேசி அனுப்பியுள்ளது திமுக டீம்.

இதே போல் விசிக தலைவர் திருமாவளவனும் 7 தொகுதிகளை கொடுத்தால் கூட்டணிக்கு தயார் என்று முரண்டுபிடிக்க, பரவாயில்லை நீங்கள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் 6 தொகுதிகள் என்றால் கூட்டணி என்று திமுக டீம் அதிரடியாக பதில் அளித்தது. இதனால் நிலைகுழைந்து போன திருமாவளவன் அவசரஅவசரமாக சென்று தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 6 தொகுதிகளுக்கு மேல் ஒரே ஒரு தொகுதி என்க, வாய்ப்பே இல்லை என்று தெரிவித்து 6 தொகுதிகளுக்கு உடன்பாட்டில் கையெழுத்திட வைத்துள்ளது திமுக.

இதே போல் கடந்த காலங்களில் தாங்கள் அதிகம் வாக்குகளை பெற்ற தொகுதிகளை குறி வைத்து மார்க்சிஸ்ட் கேட்க, நாங்கள் கொடுப்பது 3 உங்களுக்கு விருப்பமானது 3 என்கிற ரீதியில் பேசி வெற்றி வாய்ப்பே இல்லாத 3 தொகுதிகளை திமுக மார்க்சிஸ்ட் தலையில் கட்டியது. இதே போல் விசிகவிற்கும் அவர்கள் கேட்ட தொகுதிகளில் 2ஐ மட்டுமே திமுக கொடுத்துள்ளது. எஞ்சிய 4 தொகுதிகள் திமுக விசிக தலையில் கட்டிய தொகுதிகள் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஸ்டாலினிடம் பேசினால் எல்லாம் சுமூகமாகிவிடும் என்று நம்பி அவரை தொடர்பு கொள்ள இடதுசாரிகள், விசிக தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக டி.ஆர.பாலு மட்டுமே பேசுவார் என்று கறார் காட்டியுள்ளது திமுக. ஒட்டு மொத்தமாக எப்போதுமே இடதுசாரிகள் தங்களுக்கு உகந்த தொகுதிகளை பெற்று அதில் பெரும்பாலான தொகுதிகளை வென்று சட்டப்பேரவைக்கு மிடுக்காக சென்று தாங்கள் யார் கூட்டணியில் வென்றோம் என்பதை எல்லாம் மறந்து அந்த கட்சிக்கு எதிராகவே வீர வசனம் பேசுவது வழக்கம். ஆனால் இந்த முறை கூட்டணி பேச்சுவார்த்தையில் வைத்தே திமுக அந்த இரண்டு கட்சிகளையும் பிதுக்கி எடுத்துள்ளது. இதே போல் தேர்தலுக்கு ஒரு கூட்டணி என மாறும் விசிகவையும் வைத்து செய்துள்ளது திமுக.

click me!