Ramadoss: வீடியோ காட்டி மாணவி கூட்டு பலாத்காரம்.. ஓயாத டார்ச்சரால் தற்கொலை முயற்சி.. கண் சிவக்கும் ராமதாஸ்

Published : Jan 19, 2022, 03:14 PM IST
Ramadoss: வீடியோ காட்டி மாணவி கூட்டு பலாத்காரம்.. ஓயாத டார்ச்சரால் தற்கொலை முயற்சி.. கண் சிவக்கும் ராமதாஸ்

சுருக்கம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர், அதற்கு துணையாக இருந்த கல்லூரி பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது. 

மாணவி பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பண்ருட்டி ஜெ.என்.எஃப் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

அதைத் தாங்கிக்கொள்ள முடியாத விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர், அதற்கு துணையாக இருந்த கல்லூரி பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது. 

திண்டுக்கல் முத்தனம்பட்டி தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் தாளாளர் ஜோதிமுருகன் 10 நாட்களில் பிணையில் வெளிவந்து விட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளும்  அதேபோல் தப்பிவிடக்கூடாது. மாணவி பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கைது செய்யப்பட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.  வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும். அவர் அரசு செவிலியர் கல்லூரியில் படிப்பை தொடர வகை செய்வதுடன், அரசு வேலைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவிக்கு நிவாரண உதவியாக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
பதவியேற்ற முதல் நாளே ராஜினாமா செய்த விஜய்..! திருச்சி கிழக்கில் மீண்டும் இடைத் தேர்தல்..