வெற்றியை தீர்மானிப்பது சின்னம் மட்டுமே அல்ல.. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு திருமாவளவன் பதில்.

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2021, 1:43 PM IST
Highlights

10 விழுக்காடு தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு தனிச் சின்னம் வழங்கப்படும் என்று ஏற்கனவே இருந்த முறையை மாற்றி 5 விழுக்காடு தொகுதிகளில் போட்டியிடும் கட்சிக்கு தனிச் சின்னம் உடனே வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது 

வெற்றியை தீர்மானிப்பது சின்னம் மட்டுமே இல்லை எனவும்  5% தொகுதியில் போட்டியிடும் கட்சிக்கு  மட்டுமே தனிச் சின்னம் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார். எனது பார்வையில் நபிகளார் எனும் தலைப்பில் சென்னை திருவல்லிக் கேணியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பழ.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்: 

10 விழுக்காடு தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு தனிச் சின்னம் வழங்கப்படும் என்று ஏற்கனவே இருந்த முறையை மாற்றி 5 விழுக்காடு தொகுதிகளில் போட்டியிடும் கட்சிக்கு தனிச் சின்னம் உடனே வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது.சமூக வலைத்தளங்கள் வலிமையாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சின்னம் பெற்ற ஒரு மணி நேரத்தில் மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும், இதனால் போட்டியிடும் கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார். 

எனவே வெற்றியை தீர்மானிப்பது சின்னம் மட்டுமே இல்லை, மக்களிடையே கொண்டு சேர்க்கும் கொள்கைகளும், செயல்திட்டங்களும், கடந்தகால சேவைகளும் தான் வெற்றியை முடிவு செய்யும் என்றார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்களின் கையில் உள்ளது. இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்றார். 
 

click me!