உங்க அதிகார சண்டையால் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிடாதீங்க.. விஜயகாந்த் அட்வைஸ்..!

Published : Apr 26, 2022, 10:11 AM IST
உங்க அதிகார சண்டையால் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிடாதீங்க.. விஜயகாந்த் அட்வைஸ்..!

சுருக்கம்

ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள அதிகாரப் போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கவோ, கேள்விக்குறியாக்கவோ கூடாது. மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களைத் தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மையான துணை வேந்தர்களை நியமித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

சட்டத்தின்படி முன்னாள் முதல்வர்கள் காலத்திலிருந்தே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துவரும் மரபைத் தொடர்வதே சிறந்தது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

மரபை தொடர்வதே சிறந்தது

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமிருந்து, மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், துணை வேந்தராக முதலமைச்சரை ஏன் நியமிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின்படி முன்னாள் முதல்வர்கள் காலத்திலிருந்தே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துவரும் மரபைத் தொடர்வதே சிறந்தது.

மிகப் பெரிய குழப்பம்

இந்த நடைமுறையை உடனே மாற்றுவது என்பது இலகுவானது அல்ல என்றும் இந்தியா முழுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழகத்திலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது. ஏற்கெனவே நீட் விவகாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அதேபோன்று துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பான சூழ்நிலை ஏற்படுத்தாமல் தமிழக அரசு தெளிவான முடிவை எடுக்கவேண்டும்.

அதிகாரப் போட்டி

ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள அதிகாரப் போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கவோ, கேள்விக்குறியாக்கவோ கூடாது. மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களைத் தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மையான துணை வேந்தர்களை நியமித்தால் மட்டுமே பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதே தே.மு.தி.கவின் நிலைப்பாடு என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

BJP Plan: அண்ணாமலைக்கு ‘ரெஸ்ட்’ அல்ல... இது ஒரு பெரிய ‘புரமோஷன்’ - டெல்லி மேலிடத்தின் ரகசியத் திட்டம்!
விஜய் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மார்னிங் வாக்; திமுக பயப்படவில்லை என நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா தாக்கு!