வேலூர் ரிசல்ட் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு...! கூட்டணி கட்சித்தலைவர் கருத்தால் அதிர்ச்சி...!

By ezhil mozhiFirst Published Aug 9, 2019, 6:51 PM IST
Highlights

திமுக கூட்டணியில்  இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி , திமுக ஆதரவில் விழுப்புரம், மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், பெற்றுள்ள வாக்கு வித்தியாசம் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில்  இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி , திமுக ஆதரவில் விழுப்புரம், மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகுறித்து  தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைபொதுச்செயலாளர் வன்னிஅரசு,

"சிதம்பரம் தொகுதியிர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனை வெற்றிபெற விடக்கூடாது என பலசக்திகள் சதிவேலைசெய்ததாக கூறினார் அதையும் மீறி திருமாவளவன்  3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று அவர் தெரிவித்தார், ஆனால் திமுக , ஆதிமுக நேருக்கு நேர் மோதிக்கொண்ட இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற தொகுதிகளில் 3 லட்சம் நான்கு லட்சம் என வாக்கு வித்தியாசம் காட்டிய திமுகவால் வேலூரில் காட்ட முடியவில்லை என்றார், வேலூர் தேர்தல் முடிவு திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவே எனவும் வன்னி அரசு தெரிவித்தார். அவரின் இக்கருத்து திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் அதிக இஸ்லாமியர்களை கொண்ட தொகுதி என்பதால்  முத்தலாக், காஷ்மீர் பிரிப்பு, மற்றும் மோடி எதிர்ப்பு போன்றவற்றால் திமுக சுமார் 3 லட்சம் முதல் நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துவந்த நிலையில், மக்கள் அத்தேர்தலில் அதிமுகவுக்கு அதிக அளவில் வாக்களித்து அத்தனை கணிப்புகளையும் பொய்யாக்கி உள்ளனர் என்பதே இத்தேர்தல் முடிவு காட்டியுள்ளது.

click me!