நான் வளர்ந்தது போல நல்ல சூழலில் வளர்ந்திருந்தால் எனது தந்தை தப்பா போயிருக்க மாட்டார்- வீரப்பன் மகள் உருக்கம்

By Ajmal Khan  |  First Published Apr 9, 2024, 12:47 PM IST

எனது தந்தை கிராமத்தில் எத்தனை பேர் சந்தனமரத்தை வெட்டி, தந்தங்களை கடத்தினார்கள்.. எனது தந்தை மட்டும் தான் செய்தாரா? வாங்கியவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என வித்யாராணி வீரப்பன் கேள்வி எழுப்பினார். 


தேர்தல் களத்தில் வீரப்பன் மகள்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. தேர்தலுக்கு பிரச்சாரம் இன்னும் 7 நாட்கள் மட்டுமே செய்ய கால அவகாசம் இருப்பதாக அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். இன்று கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட தளி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடந்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், வித்யாராணி வீரப்பன் வாக்கு கேட்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். 

Tap to resize

Latest Videos

நல்ல சூழலில் வளந்திருந்தால்..?

எனது பெற்றோர் வளர்ப்பில் நான் வளரவில்லை,  நல்ல சூழலில் நான் வளர்ந்ததால் நல்ல முறையில் வளர்ந்து நன்றாக படித்தேன். இதுப்போன்ற சூழல் எனது தந்தைக்கும் கிடைத்திருந்தால் அதுப்போன்ற வழிக்கு போயிருக்க வாய்ப்பிருந்திருக்காது என்றார். எனது தந்தை கிராமத்தில் எத்தனை பேர் சந்தனமரத்தை வெட்டி, தந்தங்களை கடத்தினார்கள்.. எனது தந்தை மட்டும் தான் செய்தாரா? வாங்கியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று நீங்கள் மலையை உடைத்து விற்பதும் திருட்டு தானே? நாளை உங்கள் பிள்ளைகளும் நடுரோட்டில் தட்டேந்தி நிற்பார்கள் என ஆவேசமாக வித்யா ராணி பேசினார். 

இதையும் படியுங்கள்

Thiruma: தமிழ்நாட்டிற்கு தனி கொடி... விடுதலை சிறுத்தை தேர்தல் அறிக்கையில் முக்கிய அறிவிப்புகள் என்ன தெரியுமா.?

click me!