Annamalai : விசிக தலைவர் திருமாவளவனின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக விடுதலைச் சிறுத்தைகள் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனின் தாயார் பெரியம்மாள். வயது மூப்பு காரணமாக தற்போது உடல்நலக்குறைவாக உள்ளார். அவர் தன்னுடைய சொந்த ஊரான அரியலூரில் உள்ள தன்னுடைய வீட்டிலே வசித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு அண்மையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்
விசிக தலைவர் திருமாவளவனின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திருமாவளவன் தாயார் விரைவில் குணமாக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது தாயார் உடல்நலம் தேறிட வாழத்து தெரிவித்த விசாரித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், 'அம்மாவின் உடல்நலம் தேறிட அகம்நெகிழ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அன்புக்குரிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மாந்தநேய மாண்புக்கு மனமார்ந்த நன்றி. கட்சி அரசியலைக் கடந்து கனிவைக் காட்டும் பண்பு போற்றுதலுக்குரியது. அவருக்கு எனது வாழ்த்துகளும் நன்றியும்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?