AIADMK : அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். தற்போது ஓபிஎஸ் தமிழகம் முழுக்க சுற்றிப்பயணம் மேற்கொள்ள கிளம்பிவிட்டார்.
ஒற்றை தலைமை
அதிமுக பொதுக்குழு கடந்த 23-ந் தேதி வரலாறு காணாத குழப்பங்கள், வன்முறைகளுடன் முடிவடைந்தது. அதிமுகவின் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 நிமிடத்தில் முடித்து வைக்கப்பட்ட முதல் பொதுக்குழு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தீர்மானக் குழு உருவாக்கிய தீர்மானங்களையே பொதுக்குழு ஒட்டுமொத்தமாக நிராகரித்த வினோத சம்பவமும் நடந்தது இந்த பொதுக்குழுவில்தான்.
காரணம் ஒற்றை தலைமை என்ற கோஷம்தான். பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்மகன் உசேன் புதிய அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அடுத்தடுத்து பேசியவர்கள் கூறினர். தற்போது ஓபிஎஸ் தமிழகம் முழுக்க சுற்றிப்பயணம் மேற்கொள்ள கிளம்பிவிட்டார்.
இதையும் படிங்க : AIADMK : "எடப்பாடிக்கு ஆதரவு கொடுக்கல.. அதிமுகவில் இருந்து தூக்கிடுவோம்" ஓபிஎஸ்சிடம் சரணடைந்த அதிமுக பிரமுகர்
திருநாவுக்கரசர் பேட்டி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜ கோபால தொண்டைமான் சிலைக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ‘ இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் இரட்டை தலைமை என்பது ஒத்துவராது. ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே கட்சி வலுவாக இயங்க முடியும். அதன்படி அதிமுக ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே அவர்கள் செயல்பட முடியும். ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ அதைவிட எதிர்க்கட்சி பணியும் முக்கியம் அத்தகைய பணியை அதிமுக செவ்வனே செய்ய வேண்டும்.
கூட்டத்தில் தண்ணீர் பாட்டில் வீசுவது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவதோ கூடாது. கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இத்தகைய நிகழ்வுகளை அவர்கள் தடுத்திருக்கலாம் இனிவரும் காலங்களிலாவது கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். கருணாநிதிக்கு சண்முகநாதன் இருந்தார் எம்ஜிஆருக்கு மாணிக்கம் இருந்தார். ஜெயலலிதாவுக்கு சசிகலா இருந்தார். அது ஒன்றே தமிழக முதல்வராக ஆவதற்கு தகுதி கிடையாது.
இதையும் படிங்க : AIADMK : ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச்.. தர்மயுத்தம் 2.0 - எடப்பாடி எடுத்த கடைசி அஸ்திரம் ! கைகொடுக்குமா ?
இதையும் படிங்க : இரட்டை இலையை எவனுக்கும் விட்டுத் தர மாட்டோம்..களத்தில் குதித்த மாயத்தேவர் பாசறை.. யார் இந்த மாயத்தேவர்?