நாட்டின் எதிரிகள், தேச துரோகிகள் திருமாவளவனும், சீமானும். திராவிட மாடல் ஆட்சி மானக்கேடான ஒன்று. தமிழகத்தில் காட்டாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படும் என்று பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா தெரிவித்தார்.
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள செய்தியாளர் சங்க அரங்கில், பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் "தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவது கிரிமினல் குற்றம். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக திருமா, சீமான் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். இவர்களது மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதிக்க அளிக்கக் கூடாது. 1991ல் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உடன் விசிக இருக்கும் என திருமாவளவன் பேசியுள்ளார். பயங்கரவாதிகளின் கைக்கூலி திருமாவளவன். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியில் மெத்தனம்? தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோங்க - அமைச்ர் துரைமுருகன் ஆவேசம்
நாட்டின் எதிரிகள், தேச துரோகிகள் திருமாவளவனும், சீமானும். அவர்கள் மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் நல்லவர். அவரைச் சுற்றி இருப்பவர் அவருக்கு கொம்பு சீவி விடுவார்கள். அவர் தலையை சிலுப்பினால் 1991ல் நடந்தது இப்போது நடக்கும். திராவிட மாடல் ஆட்சி மானக்கேடான ஒன்று. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து உள்ளது. மின் கட்டண உயர்வு, சொத்து உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பால் பாக்கெட்டில் 'இது ஹலால் செய்யப்பட்டது' என குறிப்பிட பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். திமுக - திமிர் பிடித்தவர்கள் கட்சி. மந்திரிகள் அராஜக போக்குடன் செயல்படுகிறார்கள். தமிழ் மக்களுக்கு விரோதமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
திருச்சியில் நள்ளிரவில் மண்டை ஓடுகளுடன் நவராத்திரி கொண்டாடிய அகோரிகள்
பாண்டிச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் அமைதியாக தான் நடந்தது. டிஜிபி சைலேந்திர பாபு தமிழகத்தில் நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளார். அவர் டிஜிபியாக இருக்க அருகதை இல்லை. தமிழகத்தில் காட்டாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திருத்தப்படும். யாசிக் மாலிக்கின் நண்பர்தான் சீமான்.
யாரோ வெற்றி மாறானாம். வெற்றி மாறனோ தோல்வி மாறனோ. ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு மசூதி, சர்ச்சை எனக்கு அவர் சொல்லட்டும். ராஜராஜ சோழன் சிவ பக்தன். எனவே அவர் இந்து தான். இந்து என்பது மதம் அல்ல. அது நாடு, அரசமைப்பு. இந்துவை இந்துக்கள் அல்லாதோர் என வகைப்படுத்தி உள்ளது. இந்த மண்ணில் பிறந்த மதங்கள் இந்து மதங்கள் தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி சங்கரர் அவதரித்தார். அப்போது 72 விதமான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில் அதை ஆறாக ஒருங்கிணைத்தார். சிவம் வேற, இந்து வேற இல்ல. வேதம் வேறு சைவம் வேறு அல்ல. வேதம் வேறு தமிழ் வேறு அல்ல" என்றார்.