அதிமுக உள்விவகாரங்களில் தலையிட பாஜகவுக்கு எல்லா உரிமையும் உள்ளது.. எடப்பாடியை ஜர்க் ஆக்கிய வைத்தியலிங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 5, 2022, 3:32 PM IST
Highlights

அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவுக்கு எல்லாவிதமான உரிமையும் உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு பாஜகவுக்கு எல்லாவிதமான உரிமையும் உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக ஓபிஎஸ் இபிஎஸ் இடையே கடும் மோதல் நடைபெற்று  வருகிறது.  இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு தரப்பினரும் மாறிமாறி கடுமையாக விமர்சித்தவர் வருகின்றனர்.

அதே நேரத்தில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து அதிமுகப் இயங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இதற்கிடையில் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் டெல்லிக்கு சென்று அங்கு பிரதர் மோடி- அமித்ஷா ஆகியோரை சந்தித்து விட்டு திரும்பியுள்ளனர். இந்த சந்திப்பு அதிமுக மற்றும் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு தரப்பினரையும் ஒன்றினைக்கும்  பாஜகவின் முயற்சி என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பணியில் மெத்தனம்? தூக்கி அடிச்சிருவோம் பாத்துக்கோங்க - அமைச்ர் துரைமுருகன் ஆவேசம்

இந்நிலையில் இதுகுறித்த ஓபிஎஸ் தரப்பின் ஆதரவாளர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்று இதுகுறித்து முன்வைத்த கேள்விக்கு அவர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். அந்த ஊடகம் வைத்த சில கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும்  பின்வருமாறு:- 

இதையும் படியுங்கள்: kcr: brs:தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்

அதாவது தொண்டர்கள் தான் தலைவர்களை முடிவு செய்வார்கள் என்று சொல்லும் இந்நிலையில் எதற்கெடுத்தாலும் நீங்கள் டெல்லி பாஜகவை நோக்கி ஓடுவது ஏன்?  என்ற கேள்விக்கு,  தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அந்த அடிப்படையில் எங்களது கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடுவது பாஜகவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. கூட்டணியில் உள்ளோம் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து வருகிறோம். அந்த அடிப்படையில் ஓபிஎஸ் விரைவில் அவர்களை சந்திப்பார் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். 

திமுகவின் எதிர்ப்புதான் அதிமுகவின் உயிர்நாடி என்றுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை ஓபிஎஸ் நியாயப்படுத்துகிறாரே? என்ற கேள்விக்கு, நாங்கள் ஒன்றும் திமுக அரசின் செயலை ஆதரிக்க வில்லை. ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையுடன் செயல்படக்கூடாது,  

அப்படி நடக்கும் பட்சத்தில் அதை துணிவுடன் தைரியமாக எதிர்த்து நின்று சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்றுதான் கட்சியின் தலைவராக இருந்து ஓபிஎஸ் ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திரித்து பிரச்சாரம் செய்கின்றனர் இவ்வாறு வைத்திலிங்கம் கூறியுள்ளார். 
 

click me!