எங்களுக்கு யாரும் பிச்சை போடல... அது அரசியலமைப்பு தந்த உரிமை... திமுகவுக்கு திருமாவின் லேட் ரிப்ளே!

By Asianet TamilFirst Published Feb 22, 2020, 11:16 PM IST
Highlights

இந்தக் கூட்டத்தில் இன்னொரு விஷயத்தையும் திருமாவளவன் பேசினார். அண்மையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. 

பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள நீதிபதியானது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திமுகவுக்கு பதில் அளித்துள்ளார்.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிர்ப்பு தெரிவித்தும்,. சிஏஏ-வை திரும்ப பெற வலியுறுத்தியும் விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் திருச்சியில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் தமிழகம் முழுவதுதிலுமிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில்  திருமாவளவன் பேசும்போது, “சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவை இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஒட்டுமொத்த  நாட்டுக்கே எதிரானது. அதனால்தான் இந்தப் பேரணியை நடத்திகொண்டிருக்கிறோம்.


இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கும் பாஜக என்பது வெறும் அரசியல் கட்சியல்ல. அதை இயக்கிக்கொண்டிருப்பது ஆர்எஸ்எஸ். இவர்களின் கனவை நனவாக்கும் அரசாகத்தான் பாஜக உள்ளது. சங்பரிவாரிகளின் முதல் கோபமே அரசியலமைப்பு சட்டத்தின் மீதுதான். அதுதான் சாதி அமைப்பை தகர்த்து வருகிறது. அதுதான் சமத்துவம், சமூக நீதியைப் பேசுகிறது. எனவேதான் அதை தகர்க்க காலம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று திருமாவளவன் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் இன்னொரு விஷயத்தையும் திருமாவளவன் பேசினார். அண்மையில் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதைப் பற்றி இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார். “பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள நீதிபதியானது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமை. மறுக்கப்பட்ட உரிமையை அரசியலமைப்பு சட்டம் வழங்கியது.” என்று திருமாவளவன் பேசினார்.
 

click me!