தஞ்சை பல்கலைக்கழகத்தை அலற விட்ட துண்டு நோட்டீஸ்.!! ஊழல் முறைகேட்டை அம்பலபடுத்த காத்திருக்கும் அடுத்த நோட்டீஸ்!

Published : Feb 22, 2020, 11:04 PM IST
தஞ்சை பல்கலைக்கழகத்தை அலற விட்ட துண்டு நோட்டீஸ்.!! ஊழல் முறைகேட்டை அம்பலபடுத்த காத்திருக்கும் அடுத்த நோட்டீஸ்!

சுருக்கம்

பணம் இருந்தால் துணைவேந்தர் பதவி என்கிற நிலை தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,பாரதியார்,பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் எல்லாம் ஏலத்தில் விட்டது போல் அமைந்திருந்ததை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நீதிமன்றமே கண்டித்து அனுப்பிய துணை வேந்தர்களும் உண்டு.ஆனால் நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பது மாறி கழகங்களின் கையில் சிக்கிக் கொண்டது தான் வேதனையான விசயம்.  

T.Balamurukan

 தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென துண்டு நோட்டீஸ் வீசப்பட்டது. அந்த நோட்டீஸை படித்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இப்பல்கலைக்கழகத்தில் ,கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக அந்த நோட்டீஸ் பளிச்சிட்டது.இதனால் பல்கலைக்கழகமே பரபரப்பாக காண்ப்பட்டது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் இங்கு பொறுப்பேற்று 1 வருடம் ஆனாலும் இவர், தகுதி இன்றி  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அந்த நியமனத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு பாலசுப்பிரமணியன் தடை வாங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ் மொழி வளர்ச்சிக்காக எம்ஜிஆரால் துவங்கப்பட்டது இந்த பல்கலைக்கழகம்.  இப்போது இங்கு அரசியல் தலையீடு தலைவிரித்தாடுகிறது. அலுவலர்களிடையே உட்பூசல்,கோஷ்டி அரசியல் என பல்கலைக்கழகத்தின் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.

வீசப்பட்ட நோட்டீசில், 'தமிழ் பல்கலைக்கழக யோக்கியவான்கள் என்ற தலைப்பில் முறைகேடுகள் தொடர்பாக மூடப்பட்ட தொலைதூர கல்வி மையங்கள் உள்பட பலவற்றில் இருந்தும் லட்சக்கணக்கில் ரூபாய் வசூல்......ரூசா நிதியில் ரூ.20 கோடி விரயம். முறைகேடு..பணம் பல இடங்களுக்கும் பாயும் மர்மம். மவுனம் காக்கும் துணைவேந்தர். என்ஏஏசி வருகையையொட்டி பல லட்சம் ரூபாய் பொறியியல் பிரிவு மூலமாக ஊழல். புதிதாக நிரப்பப்போகும் பணியிடங்களுக்கென கூறி அட்வான்ஸ் புக்கிங். ஒட்டிக்கொண்டிருக்கும் துணைவேந்தரே பதில் என்ன? அரசே விசாரணை தேவை. இவ்வாறு தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில் அந்த துண்டு நோட்டீசில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நோட்டீஸ் தமிழ் பல்கலைக்கழக வட்டாரத்தில் பல பேருக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்திருக்கிறது, படுத்தி உள்ளது. நோட்டீஸ்களை வீசி சென்றது யார் என்பது பற்றி பல்கலைக்கழக வளாகம் விசாரணை நடத்தி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்