நேரு இல்லாவிட்டால் இந்தியாவே இல்லை... நேருவை பற்றி இனியும் மூச் விடாதீங்க... மன்மோகன் சிங் கடுங்கோபம்!

By Asianet TamilFirst Published Feb 22, 2020, 11:01 PM IST
Highlights

 நம் நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு நேருவை குற்றம் சாட்டுகிறார்கள். இதையே அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பொய்த் தகவல்களை வரலாறு ஏற்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்ப்பதற்காக தேசியவாதமும் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷமும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்ப்பதற்காகத் தேசியவாதமும் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்பான புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடந்தது. அந்தப் புத்தகத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டு பேசுகையில், “நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பி நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகிவற்றின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர் நேரு. அதை அடித்தளமாக வைத்துதான் நவீன இந்தியாவை நேரு உருவாக்கினார். அதனால்தான், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா மதிக்கப்படுகிறது. 


இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கலாசார நிறுவனங்களை எல்லாம் நேருதான் தொடங்கினார். நேரு இல்லாவிட்டால் இன்று இந்தியா அடைந்துள்ள நிலையை எட்டியிருக்க முடியாது. ஆனால், துரதிருஷ்டவசமாக ஒரு பிரிவினர் மட்டும் நேருவை தவறாகச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். நம் நாடு சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு நேருவை குற்றம் சாட்டுகிறார்கள். இதையே அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், பொய்த் தகவல்களை வரலாறு ஏற்காது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.


இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்ப்பதற்காக தேசியவாதமும் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷமும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இந்தப் புத்தகம் வெளியாகி இருப்பது வரவேற்கத் தக்கது.” என்று மன்மோகன் சிங் பேசினார்.

click me!