ஒவ்வொருத்தரையும் கடனாளிகளாக்கிய பாவம் ஒபிஎஸ், ஈபிஎஸ்யைத்தான் சேரும்...!! பிச்சு உதறிய திருமாவளவன்..!!

Published : Feb 25, 2020, 12:20 PM IST
ஒவ்வொருத்தரையும் கடனாளிகளாக்கிய பாவம் ஒபிஎஸ், ஈபிஎஸ்யைத்தான் சேரும்...!!  பிச்சு உதறிய திருமாவளவன்..!!

சுருக்கம்

தமிழகத்தில் ஏற்கனவே ஓஎன்ஜிசி ,  வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  அனுமதிகள் எதையுமே ரத்து செய்யாமல், காவிரி டெல்டா பகுதியை  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக எப்படி அறிவிக்க முடியும் என தமிழக அரசு விளக்க வேண்டும் .

மக்களை கடனாளிகளாக மாற்றியது தமிழக அரசுதான் ,  எனவே அதற்கு தமிழக அரசேதான் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.   சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,   ஜெயலலிதா பிறந்தநாளை சிறுமிகள் பாதுகாப்பு நாள் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது ,  வருங்காலத்தில் சிறுமிகள்,  பெண்கள் ,  தலித்துகள் பழங்குடியினர் தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கின்றனர். 

 

இவர்களின்  பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் .  அதேபோல் தமிழக அரசு 4 லட்சம் கோடி கடனில் உள்ளது , இது சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது.  தமிழக மக்களை கடனாளியாக இல்லாத ஒரு நிலையில் ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியளர்களிடம்தான்  உள்ளது ,  அந்தக் கடன் திருப்பி  அளிக்கப்பட வேண்டிய ஒன்று ,  எனவே ஆளும் கட்சி தான் இந்த கடனுக்கு பொறுப்பேற்க வேண்டும் .  மாறாக எதிர்க்கட்சிகள்  மீது பழியை போட்டு ஆளுங்கட்சி தப்பிக்க நினைக்கக்கூடாது . 

ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் .  இதற்கு உரிய பதில் சொல்லவேண்டும் ,  தமிழகத்தில் ஏற்கனவே ஓஎன்ஜிசி ,  வேதாந்தா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  அனுமதிகள் எதையுமே ரத்து செய்யாமல், காவிரி டெல்டா பகுதியை  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக எப்படி அறிவிக்க முடியும் என தமிழக அரசு விளக்க வேண்டும் .  தமிழக அரசு காவிரி படுகையை வேளாண்மை மண்டலம் என அறிவித்திருப்பது ஒரு ஏமாற்றுத்தனமான மோசடி வேலை என திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

 

 

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!