பொது இடத்தில் 'தம் ' அடித்தால் இனி ஆப்பு...!! புதிய சட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2020, 11:58 AM IST
Highlights

பிறர் உள்ளிழுத்து விடும் புகையை மற்றவர்கள் சுவாசிப்பதால்  உலகத்தில் ஆண்டிற்கு  6 லட்சம் பேர் இறக்கின்றனர் ,  அதில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள் .  ஆகவே பொது இடத்தில் புகை பிடிப்பது இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும் 

பொது இடத்தில் புகை பிடிப்போருக்கான அபராதத் தொகையை பன்மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஆகவே மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர்  ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் . பொதுஇடங்களில்  வெளியிடப்படும் புகையால் ஆண்டிற்கு உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் , இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு :-

 

பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது .  புகைத் தடுப்புச் சட்டம் தொடக்கத்தில் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டாலும் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல்  விடப்பட்டது பொது இடங்களில்  புகை பிடிப்போருக்கு அதிகபட்சமாக 200 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது ,  சில நேரங்களில் 50 ரூபாய்கூட வசூலிக்கப்படுகிறது பொதுஇடத்தில் வெளியிடப்படும் புகையில் 7 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன .  அதில் 69 வேதிப்பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவையாகும். 

பிறர் உள்ளிழுத்து விடும் புகையை மற்றவர்கள் சுவாசிப்பதால்  உலகத்தில் ஆண்டிற்கு  6 லட்சம் பேர் இறக்கின்றனர் ,  அதில் 1.30 லட்சம் பேர் இந்தியர்கள் .  ஆகவே பொது இடத்தில் புகை பிடிப்பது இந்த அளவுக்கு மோசமாக உள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும் .  பொது இடத்தில் புகை பிடிப்போருக்கு அபராத தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது . இந்தக் கட்டுப்பாடு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்மைபயக்கும் மத்திய அரசு உடனே  அபராதத்  தொகையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என அவர் கூறியுள்ளார் .

 

 

click me!