ஜனாதிபதி மாளிகையில் ராஜநடை போட்ட டிரம்ப்..! பிரம்மாண்ட அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு..!

By Manikandan S R S  |  First Published Feb 25, 2020, 11:16 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று டெல்லியில் இருக்கும் குடியரசு தலைவர் மாளிகைக்கு அவர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று டெல்லியில் இருக்கும் குடியரசு தலைவர் மாளிகைக்கு அவர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்பை வரவேற்றனர்.

Latest Videos

undefined

தொடர்ந்து அமெரிக்க அதிபருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்ட பிறகு, முக்கிய பிரமுகர்களை டிரம்பிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிமுகம் செய்து வைத்தார். டெல்லி ராஜ்கோட்டில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின் இருவரும் அங்கு மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து பிரதமர் மோடியுடன் இருநாட்டு நல்லுறவுகள் குறித்து முக்கிய பேச்சவார்த்தை நடத்த இருக்கிறார் டிரம்ப்.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தரையிறங்கினார். டிரம்ப்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். பின் அங்கிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் தனது மனைவியுடன் சென்று பார்வையிட்டார். அங்கு ஆசிரமத்தின் சிறப்புகளை பிரதமர் மோடி அவருக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் இரு தலைவர்களும் உரையாற்றினார். அதன்பிறகு அமெரிக்க அதிபர் ஆக்ராவில் இருக்கும் தாஜ் மஹாலை தனது மனைவியுடன் சென்று பார்வையிட்டார்.

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு அதிபர் டிரம்ப் அமெரிக்கா திரும்புகிறார்.

click me!