நாளை பதவியை ராஜினாமா செய்கிறேன்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த எம்.எல்.ஏ..!

By vinoth kumarFirst Published May 26, 2019, 2:20 PM IST
Highlights

மக்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளதால் சட்டரீதியாக நாளை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் அறிவித்துள்ளார். 

மக்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டு உள்ளதால் சட்டரீதியாக நாளை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக வசந்தகுமார் அறிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வென்றன. இந்த வெற்றி மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்கிறது. அரசுக்கு ஆபத்து இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் இரு அதிகாரப் பகுதிகளை வகிக்க முடியாது என்பது சட்ட வரையறை. நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நான், பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளதால் 14 நாட்களுக்குள் சட்டரீதியாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் கூறுகையில், நாளை நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். சபாநாயகர் நேரம் ஒதுக்கி கொடுத்த உடன் ராஜினாமா செய்வேன். கன்னியாகுமரி எம்.பி., பதவியை தக்கவைத்து கொள்வேன்,'' என்றார்.

click me!