தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் கிடைக்கப்போவதில்லை... பரிதாப தோல்வியால் பிரேமலதா காட்டம்!!

By sathish kFirst Published May 26, 2019, 1:51 PM IST
Highlights

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, அதேபோல இம்முறையும் கிடைக்கப் போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா படுதோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் எச்சரிக்கி விட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, அதேபோல இம்முறையும் கிடைக்கப் போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா படுதோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் எச்சரிக்கி விட்டுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு கூட்டணியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகனைத் தவிர மற்ற வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. சில தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருந்தது, அதேபோல பாமகவில் அன்புமணி முன்னிலை வகித்தார். ஆனால் தேமுதிகவின் நிலையோ பரிதாபம், நின்ன 4 தொகுதியிலும் ஒரு ரவுண்டில் கூட நாம முன்னிலைன்னு செய்தி வரலை. 

அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக ஓவர் பில்டப் காட்டி, ரெண்டு பக்கமும் பேரம் பேசி மக்களை முகம் சுளிக்க வைத்ததால் தேமுதி படு தோல்வியை சந்தித்தது மட்டுமல்லாமல், வெறும் 2.19 சதவீத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், சென்னை திருவொற்றியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அவ்வாறு இல்லாதது ஏனென்று தெரியவில்லை என்றார்.

தேர்தலில் கடந்த இரண்டு முறை தோல்வியுற்று வாக்கு சதவீதம் குறைந்ததால், சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, தற்பொழுது அதற்கான வாய்ப்பு இல்லை என்றார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் கிடைக்கவில்லை, அதேபோல இம்முறையும் கிடைக்கப் போவதில்லை என மண்ணைக் கவ்வ வைத்ததால் மக்கள் மீது பிரேமலதா காண்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

click me!