அன்புமணிக்கு அல்வா கிண்டி கொடுத்த அதிமுக, அட்வான்ஸாக ராஜ்ய சபா சீட் கேட்க பிளான் போடும் பிரேமலதா!! டரியலில் ஓபிஎஸ் இபிஎஸ்....

By sathish kFirst Published May 26, 2019, 2:05 PM IST
Highlights

வட மாவட்டத்தில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருந்தது பாமக, இதேபோல கடந்த இரண்டு தேர்தலில் மொத்த வாக்கு வங்கியையும் இழந்து தேமுதிக, அதிமுகவிடம் ராஜ்ய சபா சீட் கேட்கவுள்ளார்களாம்

வட மாவட்டத்தில் அதிகமான வாக்கு வங்கியை வைத்திருந்தது பாமக, இதேபோல கடந்த இரண்டு தேர்தலில் மொத்த வாக்கு வங்கியையும் இழந்து தேமுதிக, அதிமுகவிடம் ராஜ்ய சபா சீட் கேட்கவுள்ளார்களாம்

இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பிஜேபி கூட்டணியில் இணைந்தது. தருமபுரியில் திமுக வேட்பாளர் செந்தில் குமாரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் செந்தில் குமார் 5,70,000 வாக்குகள் எடுத்து, அன்புமணியை விட 70,000 வாக்குகள் முன்னிலை பெற்று தோற்கடித்தார். இது அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்த போது 7 தொகுதிகளை கேட்டது. அதோடு ஒரு ராஜ்ய சபா சீட்டும் ஒன்று கேட்டது. இதற்கு பதிலாக அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே ஒப்பந்தம் போடப்பட்டது.  

ஆனால் பாமக அதிமுகவை பெரிய அளவில் ஏமாற்றியுள்ளது என்றுதான் சொல்லணும். ஆமாம், எதை நம்பி கூட்டணி போட்டது அது கைகொடுக்கவில்லை, அதாவது பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு எங்கும் உதவ வில்லை. அதைவிட கொடுமை என்னன்னா? பாமக பலமாக உள்ளதாக சொல்லப்பட்ட வட தமிழகத்தில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் எல்லாம் அதிமுக  படு தோல்வி அடைந்துள்ளது. 

அதேபோல் பாமக வலுவாக இருக்கும் என சொல்லப்பட்ட இடங்களில் நடந்த இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இதில் சொல்லப்படும் விஷயம் என்னன்னா? பாமகவினர் யாரும் அதிமுகவினர் கூட்டணிக்காக வேலை பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது. அதேபோல் பாமகவின் வாக்குகள் நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவிற்கு செல்லவில்லை. இதனால்தான் பெரிய கூட்டணி அமைத்தும் கூட அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது.  

17ஆவது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் மத்தியில் பிஜேபி கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களை தட்டித் தூக்கியது. இதில் ஒரு தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் அதிமுகவில் ராஜ்யசபா சீட் யாருக்கு கொடுக்கப்படும் என்று அதிமுகவில் பெரிய விவாதங்கள் கிளம்பியுள்ளன.  

இதில், அதிமுகவில் இருக்கும் கட்சி சீனியர்களுக்கு கொடுக்கலாம் என்று தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.அந்த வகையில் கட்சியில் சீனியர்களான கரூரில் 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் ஜோதிமணியிடம் தோற்ற துணை சபாவாக இருந்த தம்பிதுரை,வைத்தியலிங்கம், கிருஷ்ணகிரியில் தோற்ற கே.பி.முனுசாமி ஆகிய மூவருக்கும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் தனது மகன் ஜெயவர்தனுக்கும் ( தென் சென்னையில் தமிழச்சியிடம் தோற்ற) ராஜ்யசபா சீட் கேட்டு அடம்பிடிப்பதாக சொல்லப்படுகிறது. 

இது ஒருபுறமிருக்க கூட்டணி கட்சிகளில் பாமாவிற்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் அபார தோல்வி அடைந்ததால் ராஜ்ய சபா சீட் கிடைப்பதில் சந்தேகம் என்று சொல்லப்படுகிறது. இதில் கொடும என்னன்னா போட்டியிட்ட 4 தொகுதியிலும் ஒரு ரவுண்டில் கூட நாம முன்னிலை வராத தேமுதிக கூட அடுத்து நடக்கும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைப்போம் என சொல்லி இப்போதே அட்வான்ஸாக ராஜ்ய சபா சீட் கேட்க பிளான் போட்டுள்ளதாம்.  ஆனால், அதிமுகவோ, பிஜேபிக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து விட்டு,அதற்கு பதிலாக அமைச்சரவையில் இடம் கேட்கலாம் என நினைக்கிறதாம். 

click me!