அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களை அதிமுக கூட்டணி என நினைக்கலாமா? - வாசன் எதிர் கேள்வி

Asianet News Tamil  
Published : Oct 27, 2016, 02:48 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
அனைத்து கட்சி  கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களை அதிமுக கூட்டணி என நினைக்கலாமா? - வாசன் எதிர் கேள்வி

சுருக்கம்

திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் திமுக கூட்டணிக்கு வர உள்ளனர் என்றால் கலந்துகொள்ளாதவர்களை அதிமுக கூட்டணிக்கு செல்ல உள்ளனர் என்று எடுத்துகொள்ளலாமா என ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவாது.

தஞ்சை,  அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம்  இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடாது. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி சாதாகமான தேர்தல் என்ற நிலை தமிழகத்தில உள்ளது. எவ்வளவு முயற்சி செய்தாலும் பிற கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்று பெற முடியாத சூழாலும் உள்ளது. இதை மனதில வைத்துக் கொண்டு மூன்று தொகுதி தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ்  போட்டியில்லை.

திமுக கூட்டிய  அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றதில் எந்தவித மான  அரசியல் நோக்கமும் இல்லை விவசாயிகள் நலன் மட்டுமே பிரதானம் என்பதால் கலந்து கொண்டோம் . தமிழகத்திற்கு முழு நேர  ஆளுநரை நடுவன் அரசு நியமிக்க வேண்டும்.  அனைத்து விவசாயிகளின் கடன்களை நடுவன் மற்றும் மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பட்டாசு வெடி விபத்துகளை தவிர்க்கும் வண்ணம்  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் கவனமாக செயல்படாமல் இருப்பதே 50% விபத்திற்கு காரணம் இதில்  பொதுமக்களும் கவனமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் தண்ணீரை தர மறுப்பவர்கள் ஓரணியில் ஒழுங்காக நிற்கிறார்கள் தண்ணீர் கேட்கும் நாம் ஓரணியில் நிற்கிறோமா என்பது கேள்விக்குறி, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் விவசாயிகள் நலனில் அக்கறை உள்ளனரா எனபதை விட அனைவரும் ஒன்று பட்டு நிற்கிறோமா என்பது கேள்விக்குறிதான் என்று தெரிவித்தார். 

திமுக கூட்டிய அனைத்து கட்சிகூட்டத்தில் கல்ந்துகொண்டுள்ளீர்கள் இது திமுக கூட்டணியில் இணைவதற்கான சூழ்நிலையாக எடுத்துகொள்ளலாமா என்ற கேள்விக்கு அப்படியானால் கலந்துகொள்ளாதவர்களை அதிமுக கூட்டணியில் இணைய உள்ளார்கள் என எடுத்துகொள்ளலாமா என்று பதில் கேள்வி எழுப்பிய அவர் காவிரி பிரச்சனை ஒரு பொதுப்பிரச்சனை , இதில் ஓரணியில் இணைவது இப்போதைய தேவை என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!