
அடுத்த மாதம் அரவக்குறிச்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த பகுதியில் தற்காலிக லாட்ஜுகளும், ஓட்டல்களும் புற்றீசலாக முளைக்கத் தொடங்கி உள்ளன.
தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு நவம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மூன்று தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
தேர்தல் நடைபெறும் இந்த தொகுதிகளில் உள்ள லாட்ஜுகளுக்கு இப்போது திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு வரும் அதிகாரிகள், பிரசாரத்துக்கு வரும் அரசியல்வாதிகள் தங்குவதற்காக இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அரவக்குறிச்சி பகுதியில் இரண்டே இரண்டு தங்கம் விடுதிகள் மட்டுமே உள்ளது. இதனால், அந்த லாட்ஜுகளின் ஒருநாள் வாடகை ஐயாயிரத்துக்கு மேல் உயர்த்தி உள்ளதாக கூறுப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள பழைய வீடுகள் ஆகியவைகளில் மரமாத்து செய்து, தற்காலிக லாட்ஜுகளாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிக லாட்ஜுகள் ஆரம்பித்துள்ள நிலையில், புதிதாக ஓட்டல்களும் ஆங்காங்கே துவங்கி உள்ளன.