வன்னியர்களே பாமகவுக்கு ஓட்டு போடுறது இல்ல.. ராமதாசை சேர்க்க மாட்டார் ஸ்டாலின். பொளந்துகட்டிய புகழேந்தி.

By Ezhilarasan BabuFirst Published Dec 17, 2021, 5:05 PM IST
Highlights

அதற்காக பாமகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கிறார். இப்போது அவரை யார் கட்சியிலிருந்து நீக்குவார்கள்.? அப்படியென்றால் பாமகவை நான் விமர்சித்தது சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வார்களா? பாமகவுக்கு அவசியமில்லாமல் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டது, இப்போது அன்புமணி ராமதாஸ் எம்.பியாக இருக்கிறார் என்றால் அது அதிமுக கொடுத்த வாய்ப்புதான். 

வட மாவட்டங்களில் வன்னிய மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலேயே பாட்டாளி மக்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை, மொத்தத்தில் வன்னியர்களே ராமதாசுக்கு ஓட்டு போடுவது இல்லை என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி வசித்துள்ளார். அதேபோல், அன்று பாமகவை விமர்சித்தேன் என்பதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கினார்கள், ஆனால் இன்று பாமகவை இபிஎஸ்சே விமர்சிக்கிறார், இப்போது அவரை யார் கட்சியிலிருந்து  நீக்குவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிற்கு ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது. ஜெயலலிதாவின் இடத்தை இட்டு நிரப்பும் அளவிற்கு அக்காட்சிகள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் இல்லை என்பதால் தொடர் தள்ளாட்டத்தில் அதிமுக இருந்து வருகிறது. இனி தலைதூக்குவதே கடினம் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், ஓபிஎஸ் இபிஎஸ் என்ற இரட்டை தலைமையின் கீழ் கடந்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியை தக்கவைக்க இயலாமல் போனாலும், வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது அதிமுக. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது அதற்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஐந்து இடங்களில் மட்டும் பாமக வெற்றி பெற்றது. இந்நிலையில் திடீரென அதிமுகவை விமர்சித்த பாமக இளைஞரணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை, பாமக மட்டும் கூட்டணியில் இல்லாமல் போயிருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என விமர்சித்தார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு அதிமுகவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, ஆனால் ஓபிஎஸ்-இபிஎஸ் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ஆனால் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் அப்போது அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, பாமகவுக்கு மொத்தத்தில் ஆறு தொகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் 24 இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். தனது உண்மை நிலை என்ன என்பதை மறந்துவிட்டு அன்புமணி பேசக்கூடாது என எச்சரித்திருந்தார். இதனால் அதிமுக பாமக இடையே விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. எனவே ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு அதிமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்குவது அறிவித்தனர்  அது புகழேந்திக்கு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது இந்நிலையில் அவர் தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என நீதிமன்றத்தை அறிவித்தனர். அதாவது பாமகவுடனான உறவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக புகழேந்தியை கட்சியில் இந்து தூக்கினர். 

ஆனால் தன்னை எந்த காரணமும் கூறாமல் ஓபிஎஸ்-இபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கிதாகவும் எனவே அந்த நீக்கம் செல்லாது என அறிவிக்க கோரி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் புகழேந்தி. அது நீதி மன்றத்தில் இருந்து வருகிறது. அதாவது கூட்டணி உள்ள பாமகவை புகழேந்தி விமர்சித்தார் என்பதற்காக அவரை கட்சியிலிருந்து ஓபிஎஸ் இபிஎஸ் நீக்கிய நிலையில், தற்போது  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாமகவுக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே பாமக வெல்ல முடிந்தது. கூட்டணி கட்சியான அதிமுக மாபகவுக்கு துரோகம் செய்துவிட்டது.பாமகவுக்கு  அதிமுகவின் வாக்குகள் கிடைக்கவில்லை. அதிமுக வாக்களித்து இருந்தால் பாமக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என அதிமுக வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தேர்தல் வரும்போதெல்லாம் பாமகவுக்கு இதே  வேலையாகிவிட்டது, அதிமுக- பாமகவுக்கு என்ன துரோகம் செய்தது என்று ராமதாஸ் அவர்களால் கூற முடியுமா? 

ஆனால் வெறுமனே அதிமுக துரோகம் செய்து விட்டது என்று அவர் மேடை தோறும் பேசி வருகிறார் என விமர்சித்துள்ளார். மொத்தத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து ஏற்கனவே உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது பாமக வெளியேறிய நிலையில், இனி இரு கட்சிகளுக்கும் எந்த உறவும் இல்லவே இல்லை என்பது ராமதாஸின் விமர்சனம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் பாமகவை விமர்சித்ததற்காக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பெங்களூரு புகழேந்தி அதிமுக- பாமக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக தாக்கி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த போது பாமக என்ற அந்த காட்சியை ஓரம்கட்டி வைத்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு அதனுடன் கூட்டணி வைத்து இப்போது அந்த கட்சி அதிமுகவையே  மிரட்டுகிறது. அன்புமணி ராமதாஸ் அதிமுகவையும் அதன் ஒருங்கிணைப்பாளரையும் இழிவு படுத்தி பேசினார் என்பதற்காக அதற்கு பதில் அளிக்கும் வகையில்தான் நான் பேசினேன். அதற்காக என்மீது இவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். இப்போது ராமதாஸ் அதிமுகவை கடுமையாக விமர்சிக்கிறார்.

அதற்காக பாமகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கிறார். இப்போது அவரை யார் கட்சியிலிருந்து நீக்குவார்கள்.? அப்படியென்றால் பாமகவை நான் விமர்சித்தது சரிதான் என்று இவர்கள் ஒப்புக் கொள்வார்களா? பாமகவுக்கு அவசியமில்லாமல் 24 இடங்கள் ஒதுக்கப்பட்டது, இப்போது அன்புமணி ராமதாஸ் எம்.பியாக இருக்கிறார் என்றால் அது அதிமுக கொடுத்த வாய்ப்புதான். இப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவால்தான் தாங்கள் தோற்று விட்டோம் என கூறி வருகிறார்,  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துதானே போட்டியிட்டது ஏன் அங்கு அவர்களால் வெற்றிபெற முடியாமல் போனது? காரணம் வன்னியர் மக்களே இப்போது பாமகவுக்கு ஓட்டு போடுவதில்லை, பாமக என்ற கட்சியே வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இப்போது  அடுத்த தேர்தலை மனதில் வைத்து திமுகவுடன் சேர்ந்துவிடலாமா என அவர்கள் முயற்சி செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக் கழகம் பாமகவை கூட்டணியில் சேர்க்கவே சேர்க்காது  ராமதாசை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு ஸ்டாலின் ஒன்றும் கலைஞர் கருணாநிதி அல்ல, திமுகவில் இணைந்து அவர்களின் கால் வாரலாம் என நினைத்தால்  அது ஒருபோதும் நடக்காது. மொத்தத்தில் பாமக அரசியல் பயணம் முடிந்து விட்டது என அவர் விமர்சித்துள்ளார். 
 

click me!