வன்னியர் சங்க அறக்கட்டளை பெயரை தன் பெயருக்கு மாற்றிய ராமதாஸ் !! அதிர்ச்சியில் வன்னியர்கள் !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2020, 8:55 PM IST
Highlights

விழுப்புரம் அருகே செயல்பட்டு வரும் வன்னியர் சங்க கல்வி அறக்கட்டளை தற்போது டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. வன்னியர் சங்கத்தின் இதயமாக செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளையின் பெயரை தனது பெயருக்கு ராமதாஸ் மாற்றிக் கொண்டது  வன்னியர் சமூதாய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“வன்னியர் சங்க அறக்கட்டளையை  கருணாநிதி முதலமைச்சராக இருந்த  தொடங்கி  வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்  நிலப்பரப்பில் வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள்  உள்ளன. பாமக நிறுவனர்  ராமதாஸ் மனைவி பெயரில் சரஸ்வதி பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியும் இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமானதுதான்.

தொடக்கத்தில்  வன்னியர் சங்க அறக்கட்டளையில் டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரஸ்வதி, ராமதாசின் சம்பந்தி கோவிந்தராஜ், அதன் பின் காடுவெட்டி குரு, போன்றவர்கள் இருந்தனர். காடுவெட்டி குரு மறைவுக்குப் பின்னர் வன்னியர் சங்கத்தின் தலைவராக, அதுவரை வன்னியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த பு.தா. அருள்மொழியை நவம்பர் 2 ஆம் தேதி ராமதாஸ் நியமித்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வன்னியர் சங்க அறக்கட்டளை டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று ஆவண ரீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே  இன்று கோனேரிக்குப்பத்தில்  உள்ள வன்னியர் சங்க அறக்கட்டளையின் பெயர் பலகையும் டாக்டர் ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது டிரஸ்டு மெம்பர்களாக டாக்டர் அன்புமணி, சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் ஆர்ஜி என்கிற கோவிந்தசாமி, ஜி.கே.மணி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம், சேலம் சுந்தர்ராஜன் ஆகியோர்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்னியர் சங்க அற்றக்கட்டளை என்ற பெயரை தனது சொந்த பெயரில் ராமதாஸ் மாற்றிக் கொண்டது வன்னிய சமுதாய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!