திமுக – காங்கிரஸ் மோதல் !! ஸ்டாலினை வறுத்தெடுத்த கே.எஸ்.அழகிரி !!

By Selvanayagam PFirst Published Jan 10, 2020, 8:00 PM IST
Highlights

கூட்டணி தர்மத்திற்கு எதிரான செயலை திமுக செய்துள்ளதாக கே.எஸ்.அழகிரி  அதிரடியாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து திமுக – காங்கிரஸ் கட்சிகள் இடையே  விரிசல் உண்டாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோதே பல இடங்களில் திமுக-காங்கிரஸ் இடையே இடப் பங்கீடு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. பல இடங்களில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாகவே அறிவித்துவிட்டது.

இந்நிலையில்  நாளை நடைபெறும் மறைமுக தேர்தலில் 303 ஒன்றிய தலைவர் பகுதிகளில்  2 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில் மாவட்ட அளவில் திமுகவுடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் 
“தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

303 ஒன்றிய தலைவர் பதவிகளில் 2 மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மாவட்ட அளவில் திமுகவுடன் எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை.

இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பான செயல். திமுகவின் இந்த செயல் வேதனையளிப்பதாக  அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!