விட மாட்டோம்.. வன்னியர் இட ஒதுக்கீடு மேல்முறையீடு..! அமைச்சர் பொன்முடி..!

Published : Nov 03, 2021, 01:15 PM ISTUpdated : Nov 03, 2021, 01:19 PM IST
விட மாட்டோம்.. வன்னியர் இட ஒதுக்கீடு மேல்முறையீடு..! அமைச்சர் பொன்முடி..!

சுருக்கம்

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்த சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்த சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வில் இந்த வழக்கை விசாரணை நடைபெற்று வந்தது. 

இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!

வழக்கு விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில், சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்காமல் இந்தச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக்கொண்ட சீர்மரபினருக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலுள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். ஆகவே, இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையும் படிங்க;- கஷ்டப்பட்டு டாக்டருக்கு படிக்க வைத்த மகள் வேறு சாதி பையனுடன் காதல் திருமணம்.. விபரீத முடிவு எடுத்த தாய், தந்தை

தமிழக அரசு தரப்பில்;- ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. 

இதையும் படிங்க;- ஊரடங்கில் செடி புதருக்குள் சில்மிஷத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி.. போலீஸ் ட்ரோனை பார்த்து தலைதெறிக்க ஓட்டம்..!

இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை. அதனால் எதிர்த்தரப்பு வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வன்னியர்களுக்கு10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என ராமதாஸ், விஜயகாந்த உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். 

 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி;- வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்ததை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும். உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்து 10.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்களுக்கான நிலை தெரியவரும்.  ஒத்திவைக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும். தொழில்நுட்ப கல்விக்கான விரிவுரையாளர் தேர்வு 200க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படும். 1060 விரிவுரையாளர் பணிக்கு 1,38,140 பேர் விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!