இந்து பண்டிகையில் தலையிட்டால் விளைவு வேற மாதிரி இருக்கும்.. மதவெறியர்களுக்கு ஹெச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை..!

Published : Nov 03, 2021, 12:14 PM ISTUpdated : Nov 03, 2021, 12:17 PM IST
இந்து பண்டிகையில் தலையிட்டால் விளைவு வேற மாதிரி இருக்கும்.. மதவெறியர்களுக்கு ஹெச்.ராஜா பகிரங்க எச்சரிக்கை..!

சுருக்கம்

தீமையை தரும் பட்டாசை தவிர்போம். உங்கள் கைகளால் நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள். நன்மையை செய்யுங்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடல் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

முஸ்லிம் மதவெறி அமைப்பு இந்துக்களின் பண்டிகை, பழக்க வழக்கங்களில் தலையிட்டால் அதேபோல் இவர்கள் பண்டிகைகள் குறித்தும் இந்துக்கள் கருத்துக்கூற வேண்டிவரும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தமிழ்நாடு ஜமாத் அமைப்பு சுவரொட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், தீமையை தரும் பட்டாசை தவிர்போம். உங்கள் கைகளால் நாசத்தை தேடிக் கொள்ளாதீர்கள். நன்மையை செய்யுங்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடல் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

இதையும் படிங்க;- அப்பவே ராஜாவை தூக்கி உள்ள வச்சியிருந்தா திரும்பவும் இப்படி பேசியிருப்பாரா.. கொதிக்கும் வேல்முருகன்..!

யாருடைய தயவு மற்றும் கரங்களிலிருந்து பிற மக்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே சிறந்த முஸ்லிமாவார். பணத்திற்கும், மனித இனத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பட்டாசை தவிர்போம். என்றும் சமுதாய நலனில் என்று சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தீப ஒளிப்பண்டிகையை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் என்ற காரணத்திற்காக  இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டதால் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது என ஹெச்.ராஜா ஆவேசமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான தலிபான்கள் ஆட்சி நடக்குது... ஹெச்.ராஜா ஆவேசம்.!

இதையும் படிங்க;-126 ஆண்டுகால உரிமை பறிபோனதா? முதல்வர்‌ மவுனம்‌ காப்பது ஏன்‌? தினகரன் கேள்வியால் திக்குமுக்காடும் திமுக..!

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- முஸ்லிம் மதவெறி அமைப்பு இந்துக்களின் பண்டிகை, பழக்க வழக்கங்களில் தலையிட்டால் அதேபோல் இவர்கள் பண்டிகைகள் குறித்தும் இந்துக்கள் கருத்துக்கூற வேண்டிவரும். இஸ்லாமிய மதவெறியர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவர்களுக்கு நல்லது என எச்சரிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!