எக்ஸ்ட்ரா காசு வாங்குற? 5 பஸ்களை பறிமுதல் செய்த ராஜகண்ணப்பன்.. ஆடிப்போன ஆம்னி ஓனர்கள்..!

By vinoth kumarFirst Published Nov 3, 2021, 11:25 AM IST
Highlights

விழாக்காலக் கட்டணம் என்ற ஒன்றே கிடையாது. இதுபோன்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களை தெளிவாக சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினோம். அதில், ராமு டிராவல்ஸ் என்ற பேருந்து மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபடும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தீபாவளி சிறப்பு பேருந்துகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,371 பேருந்துகளில் 37 பேருந்துகள் பெரும் பழுது உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைய முன்னிட்டு 20,334 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன. மக்கள் பாதுகாப்பாக, எந்தவித இடையூறு இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- 126 ஆண்டுகால உரிமை பறிபோனதா? முதல்வர்‌ மவுனம்‌ காப்பது ஏன்‌? தினகரன் கேள்வியால் திக்குமுக்காடும் திமுக..!

இதுவரை 1,70,218 பேர் சிறப்பு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் 1,05,051 பேர் முன்பதிவு செய்தவர்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- நீதிமன்ற தீர்ப்பை எண்ணி கலங்காதீங்க.. பறிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது.. ராமதாஸ் சபதம்  

விழாக்காலக் கட்டணம் என்ற ஒன்றே கிடையாது. இதுபோன்ற பெயர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களை தெளிவாக சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினோம். அதில், ராமு டிராவல்ஸ் என்ற பேருந்து மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபடும்.

இதையும் படிங்க;- உயிருக்குப் போராடும் தாயின் கடைசி ஆசை.. ஆஸ்பிட்டலில் தாய்மாமன் மகளை திடீர் திருமணம் செய்த 40 வயது மகன்.!

மேலும் போக்குவரத்து பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர்க்காக தண்ணீர் எடுக்கப்படும் இடத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை முடிந்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

click me!