இனி சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடே இப்படி தவிக்கப்போகிறது!! ஷாக் கொடுத்த விசிக வன்னி அரசு

By sathish kFirst Published Jun 19, 2019, 1:30 PM IST
Highlights

தமிழகமே இப்படி தண்ணீருக்காக தத்தளிக்கிறது அரசாங்கம் என்ன செய்யப்போகிறதோ என விசிக வன்னி அரசு இனி சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடே இப்படியான ஆடம்பர வேலைகளை செய்ய முடியாமல் தவிக்கப்போறது என்பது நம் கண்முன்னே தெரிகிறது என தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
 

30 ஆண்டுகளுக்‍கு பின்னர் தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில், பல்வேறு தங்கும் ஹாஸ்டல்கள், ஹோட்டல்கள் , தண்ணீர் பிரச்னையால் மூடப்பட்டுள்ளன. ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வளைப்பார்க்க சொல்லியுள்ளது. தனியார் பள்ளிகள் பாட்டிலில் தண்ணிர், ஸ்பூன்  எடுத்து வர சொல்லியும் அறிவுறுத்தியுள்ளது. சில இடங்களில் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தமிழகமே இப்படி தண்ணீருக்காக தத்தளிக்கிறது அரசாங்கம் என்ன செய்யப்போகிறதோ என விசிக வன்னி அரசு இனி சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடே இப்படியான ஆடம்பர வேலைகளை செய்ய முடியாமல் தவிக்கப்போறது என்பது நம் கண்முன்னே தெரிகிறது என தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில்; மூஞ்சி கழுவுற ஆடம்பர வேலைக்கெல்லாம் இனி இடமில்லை, தண்ணீர்...தண்ணீர்..திரைப்படத்தை யாரும் 
மறந்து விட முடியாது.

1981 ஆம் ஆண்டு வெளியே வந்தது. திரைப்படத்தை  பார்த்தவர்கள் இது ஒரு கற்பனை படம். கதை வசனம் எழுதிய திரு.கோமல்சுவாமி நாதனுக்கு நல்ல கற்பனை என்று விமரித்தார்கள். அத்திப்பட்டி கிராமம் தண்ணீருக்காக செத்துக்கொண்டிருக்கும் சோகத்தை தான் திரைக்கதையாக்கி இருந்தார்கள். படம் சக்கை போடு போட்டது.

30 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு கதையை எழுதி நாடகமாக்கி, அதை திரைப்படமாகவும் தந்துள்ளார்கள். இயக்கம் கே.பாலசந்தர். நீர் அரசியல் குறித்த தொலை நோக்கு பார்வையோடு தண்ணீர் பிரச்சனையை அலசிய  முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்க முடியும். ஒரு கதையாசிரியருக்கு இருக்கும் தொலைநோக்கு பார்வை அரசாங்கத்துக்கு இல்லையே என்கிற கவலை தான் மேலோங்குகிறது. இன்றைக்கும் இந்த திரைப்படம் அப்படியே பொருந்துகிறது.

திரைப்படத்திலிருந்து  ஒரு காட்சி

வெளியூரிலிருந்து வந்த ஒருவர் அந்த அத்திப்பட்டி கிராமத்து வீட்டு முன் சாப்பிட்டு விக்கிக்கொண்டே.”தண்ணீர் தண்ணீர் “என்று கேட்பார். வீட்டிருந்து வருபவர், “என்னப்பா”என்பார்.  “விக்குதுய்யா கொஞ்சம் தண்ணீ கொடுங்கய்யா”
என்பார்.

“ இந்த ஊருல அடுத்தவன் பொஞ்சாதிய கூட கேட்பது தப்பு இல்லை. ஆனால் தண்ணீ கேப்பது மகா பாவம்” என்று சொல்வார்.
அந்த வெளியூரை சேர்ந்த வெள்ளைச்சாமி அத்திப்பட்டியிலேயே தங்க அனுமதி கேட்பார். 
ஊர் கூட்டம் கூடியது.

“ இந்த வெள்ளைச்சாமி இந்த ஊருலயே தங்கனுங்கிறான். இந்த ஊருக்காக தண்ணீ வண்டி அடிக்கனுமுங்கிறான்”
என்று அந்த ஊரு வாத்தியார் பேசுவார்.

ஒருவர், “அப்ப குளிக்கலாம், பல்லு விளக்கலாம், மூஞ்சி கழுவலாம்” என்று சொல்வார்.

“ ஏலே அந்த ஆடம்பர சோலிக்கெல்லாம் இங்க இடமில்லலே” என்பார் ஒருவர்.

“ ஏங்க முகம் கழுவுறது, பல்லு விளக்குறது கூட ஆடம்பரமா?” என்று அப்பாவியா கேட்பார் வெள்ளைச்சாமி.

இனி சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடே இப்படியான ஆடம்பர வேலைகளை செய்ய முடியாமல்
தவிக்கப்போறது என்பது நம் கண்முன்னே தெரிகிறது. அரசாங்கம் 
என்ன செய்யப்போகிறதோ...

வாய்ப்பிருந்தாலல் மீண்டும்  ஒருமுறை எல்லோரும் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தை பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.

click me!