
தன்னை பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் சமூக வலைதளங்களில் தவறாக எழுதிவந்த சங்கர் நாராயணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆதித்தன் மீதுகிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக பாஜகவின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் 1989–ல் சேர்ந்த இவர் பா.ஜனதா மாநில மகளிர் அணி பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் மாநில செயலாளர், மாநில பொது செயலாளராக பதவி வகித்தார்.
2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியிலும், 2016சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியிலும் பாஜகசார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களைசங்கர் நாராயணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆதித்தன் ஆகியோர் பதிவிட்டு வெளிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் அவதூறகவும், கொச்சையாகவும் சமூக வலைதளங்களில் எழுதி வரும் சங்கர் நாராயணன் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆதித்தன்ஆகியோருக்கு வானதி சீனிவாசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அவர்கள் இருவரும் அதையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இன்னும் பல ஆதாரங்களை பதிவிட்டனர்.
இந்நிலையில், அவர்கல் இருவர் மீதும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,பெண்கள் குறித்தான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போது பாதுகாப்பு குறைவாக உள்ளதாகவும், அதற்கான சட்டத்தை வலுமை படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பெண்கள் பாதுகாப்பு நிதி குறித்த திட்டங்களை வகுத்துமாநில அரசு மத்திய அரசிடம் கொடுத்தால் அதற்கான நிதியை ஒதுக்கிவிடுவார்கள் என வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.