ஜெயலலிதா மரணம் குறித்த புகார் – நாளை வருகிறது தீர்ப்பு

 
Published : Jun 27, 2017, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
ஜெயலலிதா மரணம் குறித்த புகார் – நாளை வருகிறது தீர்ப்பு

சுருக்கம்

Compliant about jayalalitha death - judgment on tomorrow

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த மனுவை விசாரனை செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடகோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனசைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22-ஆம் தேதி செல்வவினாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்மனு அளித்தார்.

அந்த மனுவில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் முத‌லமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எ‌னதெரிவித்திருந்தார்.

செல்வவினாயகத்தின் இந்த புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அ‌வர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார். அதில் த‌னது புகாரை பதிவு ‌செய்து விசாரணை செய்ய தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரினார்.

இதுகுறித்த வழக்கு சைதாபேட்டை நீதிபதி மோகனா முன்பு விசார‌ணைக்கு வந்தது. அப்போது காவல் நிலையத்தில் யாரொருவர் புகார் தொடுத்தாலும் அதனை பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்‌றம் உத்தரவிட்டிருப்பதால் வழக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கபட்ட்து.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா நாளை இவ்வழக்கு தொடர்பாக‌ உத்தரவிடப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!