ரூ.1,500 கட்டணமா.? வந்தே பாரத் ரயில்கள் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாது - இது தமிழர் விரோதம்.!!

By Raghupati R  |  First Published Apr 4, 2023, 4:22 PM IST

300 ரூபாய்க்கு பயணம் செய்து கொண்டு வந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களில் 1500 ரூபாய் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கோவை.ராமகிருஷ்ணன்.


தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் முனைப்பு காட்டி வருகிறார். 

இந்த ரயில்கள் விமானங்களில் செல்பவர்களுக்கு மாற்றாக பெரும் செல்வந்தர்கள் பயனடையும் வகையில் அதிக கட்டணத்தில் இயக்கப்படுகிறது ஏற்கனவே கோவையில் இருந்து சென்னை செல்லக்கூடிய ஏழை எளிய மக்கள் முன்பதிவு இல்லா ரயில் பெட்டிகளில் 300 ரூபாய்க்கு பயணம் செய்து கொண்டு வந்த நிலையில் வந்தே பாரத் ரயில்களில் 1500 ரூபாய் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Latest Videos

இதையும் படிங்க..ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் உபியில் கைது.. தீவிரவாத செயலா? பரபர பின்னணி

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்களில் முன் பதிவுல்லா பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி உள்ள பெட்டிகள் குறைக்கப்பட்டு அதிக கட்டணம் உள்ள குளிர்சாதன பெட்டிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தக்கல் என்ற பெயரில் கூட்ட நெருக்கடி தகுந்தார் போல் கட்டணம் நிர்ணயித்து விற்பனை செய்கிறார்கள்.பேசஞ்சர் (பயணிகள்) ரயில்களை ஏற்கனவே ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. 

அதனால் மாதக் கட்டணத்தில் செல்லக்கூடிய தொழிலாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கோவை சேலம் பேசஞ்சர் ரயிலை ரயில் பாதை பராமரிப்பு என்ற பெயரில் மாதக்கணக்கில் நிறுத்தி வைத்துள்ளது.இதுபோல கேரளாவுக்கு செல்லும் எந்த ரயிலும்  நிறுத்தப்படவில்லை. வந்தே பாரத் ரயிலை விடுவதற்கு முனைப்பு காட்டும் ஒன்றிய அரசு, கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் விட கோரி தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை ரயில்கள் விடப்படவில்லை.

இதையும் படிங்க..ஒரிஜினல் ட்விட்டர் லோகோ எவ்வளவு விலைக்கு வாங்குனாங்க தெரியுமா.? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

மேலும் மாநிலத்திலும் இயங்கும் ரயில்களுக்கு இதுவரை மாநில மொழியிலேயே பெயர்கள் சூட்டப்பட்டிருந்தது. குறிப்பாக சேரன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் ,சோழன் மலைக்கோட்டை என தமிழிலேயே இதற்கு முன்னர் பெயர் சூட்டப்பட்டு வந்தது.ஆனால் ஒன்றியத்தில் பாஜக பதவி ஏற்றதில் இருந்து எல்லா ரயில்களுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டி வருகின்றனர். எனவே ஒன்றிய பாஜக அரசு இந்த தமிழ்/தமிழர் விரோத போக்கை நிறுத்துவதோடு,ஏழை,எளிய மக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மக்களும் பயன்படும் வகையில் எளிய கட்டண ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

click me!