தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பேச மறுத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்தி திணிப்பு விவகாரத்தில் திமுகவை விளாசியுள்ளார்.
தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக பேச மறுத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்தி திணிப்பு விவகாரத்தில் திமுகவை விளாசியுள்ளார். கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடியின் மகள் திட்டத்தில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துக்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: தோட்டத்தில் உயிரிழந்த சிறுத்தை.. ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பிய வனத்துறை..!
அப்போது அவரிடம் இந்திய கடற்படை சுடப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க மறுத்த அவர், அரசியல் சம்பந்தமானதை அப்புறம் பேசலாம் என்று கூறிவிட்டர். ஆனால் மற்றொரு அரசியல் கேள்வியான இந்தி திணிப்பு தொடர்பான கேள்விக்கு இந்தி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள் இந்தி கற்றுக் கொண்டு உள்ளார்கள்.
இதையும் படிங்க: இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
ஆனால் யார் ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் அரசாங்க பள்ளியில் படிக்கும் ஏழை குழந்தைகள் தான். தமிழக அரசுக்கு இன்னொரு மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதைத்தான் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மோடி மருத்துவக் கல்வி உட்பட தாய்மொழியில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார். ஏன் முதல்வர் தாய்மொழியில் கற்றுக் கொடுக்க முயற்சி எடுக்கவில்லை என்று பதிலளித்தார்.