முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம்.. திமுக எம்.பி. செந்தில்குமாருக்கு வானதி சீனிவாசன் சவால்..!

By vinoth kumar  |  First Published May 10, 2022, 11:24 AM IST

திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் என பதிவிட்டிருந்தார்.


திமுகவுடன் 2 பாஜக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாகவும் தலைமை இசைவு தெரிவித்தால்  2 பேரையும் தூக்கிவிடுவோம் என தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியதற்கு முடிந்தால் தூக்குங்கள் பார்க்கிறோம் என வானதி சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.

திமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக உள்ள திருச்சி சிவா திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவரது மகன் சூர்யா கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால், சூர்யாவுக்கு, திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால், சூர்யா அதிருப்தியில் இருந்து வந்தார். 

Latest Videos

undefined

இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா மாநில பாஜக தலைவர் அண்ணாமலையில் முன்னிலையில் பாஜகவில் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சிவா;- திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்வதற்காக இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  செந்தில் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் என பதிவிட்டிருந்தார். இது பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், நகார்கோவில் எம்எல்ஏ காந்தி, திருநெல்வேலி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் தான் தமிழகத்தில் பாஜக எம்எல்ஏக்களாக உள்ளனர். இதனால் இவர்களில் யாராக இருக்கும் என விவாதம் சமூகவலைதளத்தில் ஓடியது. இந்நிலையில் தான் செந்தில்குமார் எம்பிக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;-  செந்தில்குமார் எம்பியின் பதிவை ரிடுவிட் செய்து ‛முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.

click me!