
தொப்பி சின்னம் அறிவிக்கப்பட்டதில் இருந்து டி.டி.வி உள்பட அனைத்து அமைச்சர்களும் தொப்பி அணிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதில் முதலமைச்சர் எடப்பாடியும் விதிவிலக்கல்ல.
எம்.ஜி.ஆர். கெள பாய் வேடத்தில் நடித்த வேட்டைக்காரன் படம் வசூலில் சக்கை போடு போட்டது. மிக குறைந்த செலவில், மிக குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் அது.
ஆனால், அதே கால கட்டத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட புராண படமான கர்ணன், அற்புதமாக இருந்தும் வசூலில் பின்தங்கிவிட்டது.
அதன்பிறகு, ஜேம்ஸ்பாண்ட் படங்களை போன்று தமிழில் காமிரா மேதை கர்ணன், பலப்படங்களை ஜெய்சங்கர் நடிப்பில் உருவாக்கினார். அந்த படங்கள் பலவற்றில் கெள பாய் வேடம் ஜெய்சங்கருக்கு பொருந்தியது.
கெள பாய்களின் தொப்பி மற்றும் உடை அலங்காரங்கள் சூப்பராக இருக்கும். குறிப்பாக கெள பாய்களுக்கு தொப்பியே முக்கிய அடையாளம்.
தற்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம், தொப்பி சின்னத்தை கொடுத்ததுதான் தாமதம், தினகரன் அணியை சேர்ந்த பலரும் கெளபாயாகவே மாறி வருகின்றனர்.
கௌ பாய் போன்று தொப்பி அணிந்து அமர்ந்து இருந்த வளர்மதியின் படம், சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதுவே இன்று ஹாட் டாபிக்.
வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றோர் பற்றி சிறிய துருப்பு கிடைத்தாலும், சைக்கிள் கேப்பில் லாரியை ஓட்டுவார்கள் நெட்டிசன்கள்.
சும்மாவே வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி போன்றோரை கலாய்க்கும் நெட்டிசன்கள், இதுபோன்ற காட்சிகளை பார்த்து, அதை படம் பிடித்து மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள்.
இதனால், எது வேணும்னாலும் பண்ணிட்டு போங்கடா... என்ற விரக்தியில், எதுவும் சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார் வளர்மதி.