விலை போனாரா தீபா..? - அதிர்ச்சியில் தொண்டர்கள்

Asianet News Tamil  
Published : Mar 24, 2017, 11:55 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
விலை போனாரா தீபா..? - அதிர்ச்சியில் தொண்டர்கள்

சுருக்கம்

an information spreading that deepa nomination cancelled

ஆர்கே நகர் இடை தேர்தலில் தவறான தகவலை பதிவு செய்ததால், வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வேண்டுமென்றே நிகழ்ந்ததா என்ற சந்தேகமும், தீபா ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளது.

தமிழக அரசியலில் மிகப் பெரிய சக்தியாக விளங்கிய ஜெயலலிதா மறைந்தபோது, அதிமுக என்ற மிகப் பெரிய இயக்கத்துக்கு தலைமை தாங்கவும், ஜெயலலிதா இடத்தை நிரப்பவும் பலரும் போட்டியிட்டனர்.

ஜெயலலிதாவின் இறுதி நாட்களில், அப்பல்லோ மருத்துவமனை வாசலில், போலீசாருடன் சண்டையிட்டு கொண்டிருந்த ஒரு பெண், மீடியாக்களின் கவனத்தை கவர்ந்தார்.

அச்சு அசலாக ஜெயலலிதா போன்ற தோற்றத்துடன், அவருடைய குரல், பாவனையுடன் இருந்த பெண், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பது எல்லோருக்கும் தெரியவந்தது.

பெரும் எதிர் பார்ப்புடன் மீடியாக்களால் முன்னிறுத்தப்பட்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன்னுடைய அத்தையின் வழியில், நடைபோட உள்ளதாக பேட்டியளித்தார். அத்தையின் மரணத்துக்கு நீதி கேட்டார்.

அரசியலில் குதிப்பது பற்றி, விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார். இதை நம்பிய பொது மக்கள், அதிமுக தொண்டர்கள், தினமும் தீபாவின் வீட்டு வாசலில் குவிந்தனர்.

சசிகலா தரப்பினர் மீது கோபம் அடைந்து இருந்த அதிமுக தொண்டர்கள், தீபாவை தங்களை வழி நடத்த வந்த தலைவியாக நம்பினர்.

ஜெயலலிதா சாயலில் இருந்ததால், அவரை போன்றே நிர்வாக திறமை இருக்கும் என நம்பிய தொண்டர்களின் எண்ணத்தில் மண் விழுந்ததுபோல் ஆனது. 

எந்த ஒரு விஷயத்திலும் அதிரடியாக துணிச்சலுடன், முடிவு எடுப்பவர் ஜெயலலிதா. எந்த ஒரு விஷயத்தையும் அதை பற்றி ஞானமே இல்லாமல், தெளிவான பதிலும் அளிக்க முடியாமல் திணறி வருபவர் தீபா.

தொண்டர்களை சந்திப்பதிலேயே நேரத்தை கடைபிடிக்காமல் அருகில், பவுன்சிர்கள் என்று அழைக்கப்படும் நபர்களை வைத்து கொண்டு யாரையும் அண்டவிடாமல், தனக்கு வேண்டியவர்களை வைத்து கொண்டு முடிவு எடுப்பது. நடைமுறைக்கு ஒத்துவராத முடிவுகளை அறிவிப்பது.

கார் டிரைவரை பேரவையின் பொது செயலாளர் ஆக்கியது. ஓ.பி.எஸ்ஸுடன் கூட்டணி என அறிவித்துவிட்டு, பின்னர் அதில் இருந்த பின் வாங்கியது போன்ற காரணங்களால் தீபாவிடம் இருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்து, ஓ.பி.எஸ். அணிக்கு தாவினர்.

இது ஒருபுறம் இருக்க, தனது கணவருடன் சண்டையிட்டு, மேலும் வலுவிழந்துபோனார் தீபா.

இந்நிலையில் தீபா, ஆர்கே நகரில் போட்டியிட முடிவு செய்த தீபா, தி.மு.க, அதிமுக ஓபிஎஸ் அணி, தினகரன் அணி என வலுவான போட்டியாளர்கள் மத்தியில் களம் இறங்கியுள்ளார்.

தீபா, ஓட்டுகளை ஓரளவு பிரிப்பார் என பலரும் பேசி வந்த நிலையில், தனது வேட்புமனுவில், தனக்கு கணவர் இல்லை என குறிப்பிட்டு, அதனால் வேட்புமனு தள்ளுபடி ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஒருவகையில் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தீபாவின் மனு தள்ளுபடி ஆகலாம். ஏற்கனவே தீபாவின் கணவர் மாதவன், தினகரன் அணியினரால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளார் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ள நிலையில், வேண்டுமென்றே வேட்புமனு தள்ளுபடி ஆக வேண்டும் என்பதற்காக தவறான தகவலை, தீபா அளித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தீபாவும் விலை போய்விட்டாரா என்ற கோபம், தீபா பேரவை தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!