
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமக்கு கணவர் இல்லை என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார்.
தொடக்கத்தில் தீபாவுக்கு தொண்டர்களிடையே பெரும் ஆதரவு இருந்துவந்தது. ஆனால் அவரின் மெதுவான நடவடிக்கைகள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டதில் தாமதம், குழப்பம், தொண்டர்களை முறையாக திட்டமிட்டு சந்திக்காதது, கட்சி நடவடிக்கைகளில் கணவர் மாதவனின் தலையீடு என தொடர்ந்து அவரது நடவடிக்கைளால் நொந்து போன தொண்டர்கள் அவரைவிட்டு விலகி ஓபிஎஸ் பக்கம் சேரத் தொடங்கினர்.
ஆனாலும் ஜெ. பிறந்த நாளன்று எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவையை தொடங்கினார். அப்போது அவருடன் இருந்த தீபாவின் கணவர் மாதவன் பின்னர் பின்னர் சண்டைபோட்டுக் கொண்டு தீபாவை விட்டு பிரிந்த சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபா நேற்று தாக்கல் செய்த வேட்பு மனுவில், கணவர் பெயர் என்ற இடத்தில், கணவர் இல்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் மாதவன் தொடர்பான எந்த விபரங்களையும் அவர் குறிப்பிடவில்லை.
பொதுவாக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தங்களது துணை யார்? அவர்களது சொத்து மதிப்பு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். தீபா தாக்கல் செய்த மனுவில் அவரது வங்கிக் கணக்கில் 1 லட்சத்து 77 ரூபாய் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.