இரட்டை இலை சின்னம் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வாக்கு கூடுதலாக பெற்று விட்டால் அரசியலை விட்டு விலக தயார் என எடப்பாடி பழனிசாமிக்கு வைத்தியலங்கம் சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு இடையே வார்த்தை போர் அதிகரித்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் என விமர்சித்தார். மேலும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஓபிஎஸூம் நானும் ஒன்றாக இருக்கும் போது எங்கள் இருவரையும் துரோகி என்றார் டிடிவி.தினகரன். இன்று இருவரும் நண்பராகிவிட்டார்.
undefined
ஓபிஎஸ்வுடன் போய் சேர்ந்தால் தூக்கில் தொங்குவதற்கு சமம் என்றார் டிடிவி.தினகரன். இன்றைக்கு கயிறு கிடைக்கவில்லை போல என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனை கடுமையாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், ஒரத்தநாட்டில் பல ஆயிரம் பேர் திரள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தகவலின் படி 5 ஆயிரம் பேர் மட்டுமே வந்தனர். அதுவும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
ஆயிரம் ஓபிஎஸ் வந்தாலும், ஆயிரம் வைத்தியலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். துரோகியும் துரோகியும் இணைந்து விட்டனர் டிடிவி- ஓபிஎஸ் இணைந்து விட்டதாக சொல்கிறார்.
இதே டிடிவி தினகரனுக்காக ஆர்கே நகர் தொகுதியில் தேர்தலில் பிரச்சாரத்தி்ல் எடப்பாடி பழனிசாமி பேசும் போது டிடிவியை போல் வல்லவர் இல்லை. அரசியல் வித்தகர் இல்லையென பிரச்சாரம் செய்தவர், இப்படி முன்னுக்கு முரனாக தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்து பேசுவது, இன்றைக்கு இருவரும் சந்தித்து கொண்டார்கள் இனி நமக்கு அரசியல் வாழ்வு கிடையாது என நினைத்து என்ன பேசுகிறோம் என தெரியாமல் நேற்று பேசியதை மறந்து விட்டு முன்னுக்கு முரனாக பேசிகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 8 தேர்தலில் தோல்வி அடைந்த எடப்பாடியை பந்தைய குதிரை என்று சொல்லலாமா.? முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு அறிவு உள்ளதா.?
ஒரு தேர்தலில் வெற்றி பெறவில்லை. கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு அதிமுக ஆதரவு கொடுத்த புலிகேசி தொகுதி தோல்வி அடைந்துவிட்டது. தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என எடப்பாடிக்கு தெரியவில்லை. முதலமைச்சர் என்ற தகுதி எடப்பாடிக்கு இல்லை. சுய லாபத்திற்காக அதிமுகவை அழிக்க பார்க்கிறார். உங்களால் முடிந்தால் இரட்டை இலை சின்னம் இல்லாமல் நில்லுங்கள் உங்களை எதிர்த்து நாங்கள் நிற்கின்றோம். எங்களை விட ஒரு வாக்கு கூடுதலாக வாங்குங்கள் அரசியலை விட்டே வெளியேறுகிறோம் என வைத்தியலிங்கம் தெரிவித்தார்.