வைகோவை சிங்களர்கள் மிரட்டியதற்கு கண்டனம்..! இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டம்..!

Asianet News Tamil  
Published : Sep 27, 2017, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
வைகோவை சிங்களர்கள் மிரட்டியதற்கு கண்டனம்..! இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டம்..!

சுருக்கம்

vaikos supporters doing protest infront of srilankans embassy

வைகோவை சிங்களர்கள் மிரட்டியதற்கு கண்டனம்..! இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டம்..!

ஜெனிவாவில் நடந்துவரும் ஐநா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்துக்கு எதிராகவும் வைகோ பேசினார்.

வைகோவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐநா கூட்டத்திற்கு வந்திருந்த சிங்களர்கள், வைகோவை சூழ்ந்துகொண்டு மிரட்டினர். இனப்படுகொலை செய்த ராணுவத்தினரில் சிலரும் அந்த கூட்டத்தில் இருந்ததாக வைகோ தெரிவித்திருந்தார். 

வைகோ மிரட்டப்பட்டதை அடுத்து அவருக்கு ஐநா பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில், வைகோவை சிங்களர்கள் மிரட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அப்போது பேசிய மல்லை சத்யா, வைகோவை சிங்களர்கள் மிரட்டியதற்கு இந்திய அரசு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் சிங்களர்களின் இந்த செயலுக்கு இலங்கை வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!