மேக் இன் இந்தியாவா? மேக் இன் சீனாவா? மோடியைக் கலாய்த்த ராகுல் காந்தி..!

First Published Sep 27, 2017, 9:57 AM IST
Highlights
Make in India? or Make in China? Rahul Gandhi blasted Modi


மேக் இன் இந்தியா.. மேக் இன் இந்தியானு என்னதான் மோடி கூவிவந்தாலும் இந்தியாவில் கிடைப்பது என்னவோ சீன பொருட்கள்தான் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடினார். அப்போது பேசிய அவர், மேக் இன் இந்தியா என்று பிரதமர் மோடி பேசிவருகிறார். ஆனால் கடிகாரம், கேமரா, ஆடைகள் என இங்குள்ள அனைத்து கடைகளிலும் சீன பொருட்கள் தான் கிடைக்கின்றன என விமர்சித்தார்.

இவ்வளவு ஏன்? குஜராத்தில் மோடி அரசு அமைத்த சர்தார் வல்லபாய் படேலின் சிலை கூட சீனாவில் செய்ததுதான் என ராகுல் காந்தி அதிரடியாக விமர்சித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மோடி கூறினார். ஆனால் அத்திட்டத்தின் மூலம் வெறும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் வேதனையில் இருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

click me!