"எம்எல்ஏக்கள் குதிரை பேர விவகாரம்" - வைகோ அந்தர் பல்டி பேட்டி!!

First Published Jun 17, 2017, 12:13 PM IST
Highlights
vaiko pressmeet about mla for sale video


தமிழகம் பஞ்ச பிரதேசமாக மாறி வருவதாகவும், விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழகம் பஞ்ச பிரதேசமாக மாறி வருகிறது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது மட்டுமல்லாமல் ஆந்திர கேரளா போன்ற மாநிலங்களில் தடுப்பனைகள் கட்டி வருவது தமிழகத்திற்கு மேலும் கேட்டை விளைவிக்கும். 

மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழத்தை மேலும் நாசப்படுத்தி வருகின்றன. ஹைட்ரோகார்பன் திட்டம் சூழ்ச்சியுடன் கொண்டு வரப்பட்ட திட்டம். 

மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஹைட்ரோகார்பன் திட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும். தகவல் தொழில் நுடப துறையினர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய, மாநில அரசு பணி நீக்க தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

எம்.ஏல்.ஏ.க்கள் பேரம் பேசியது அவமானத்திற்கு உரியது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இவ்வாறு வைகோ அறிக்கை விட்டுள்ளது எம்.எல்.ஏக்கள் பேர விவகாரத்தில் தினகரன் , ஓ.பி.எஸ் தரப்பிற்கு சிக்கல் வரப்போகிறது என்பதை தெரிந்துகொண்டதன் முன்னோட்டம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

click me!