
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. இடைத்தேர்தலில் திமுக., சார்பில் போட்டியிடும் மருது கணேஷுக்கு ஆதரவு கோரி கூட்டணிக் கட்சிகளிடம் பேசிவிட்டது அக்கட்சி. ஒவ்வொருவராக தங்கள் ஆதரவையும் திமுக.வுக்கு தெரிவித்து வருகிறார்கள். திருமாவளவன், காங்கிரஸின் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட். இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ராமகிருஷ்ணன் என ஆதரவுகளைத் தெரிவித்து வரும் நிலையில், அண்மைக் காலமாக திமுக.,வுடன் சார்பு நிலை எடுத்து வரும் மதிமுக., பொதுச் செயலர் வைகோ., தங்கள் கட்சியின் நிலை குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலர் வைகோவின் சந்திப்பு திடீரென நிகழ்ந்தது.
கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த ஸ்டாலின், ஓய்வாக அமர்ந்திருந்த நிலையில், அவரைச் சென்று சந்தித்துப் பேசினார் வைகோ. அப்போது, அவருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர் வெளியில் வந்த வைகோவிடம் செய்தியாளர்கள், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் குறித்து ஏதும் பேசினீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர்,
ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக ஸ்டாலினுடன் எதுவும் பேசவில்லை.
அரசியல் நாகரிகம் காரணமாக சந்தித்துப் பேசுவதில் தவறில்லை என்று கூறினார்.